போத்துக்கீசர் காலத்தில் வந்த புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில்
தமிழர்களின் பெருமையை காட்டும் கலையம்சங்களில் கோயில்களும் ஒன்று.
அந்த வகையில் இலங்கை தமிழர்களின் கோயில்களில் ஒன்று தான் புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில்.
இந்த கோயிலை அருள்மிகு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் என்றும் இலங்கை மக்கள் அழைப்பர்.
இலங்கையை போர்த்துக்கேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் நிறுவப்பட்டது தான் இந்த புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயில். இந்த கோயிலை கதிரவேலு விஸ்வலிங்கம் உடையார் கட்டியுள்ளார்.
புங்குடுதீவின் தென்கிழக்குக் கடற்கரையில் “கோரியா” என்னும் இடத்தில் அழகிய பேழை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த பேழையை திறந்து பார்த்த போது அதனுள் கண்ணகி அம்பாள் சிலை இருந்துள்ளது.
இந்த அம்மனை தான் கதிரவேலு உடையார் கிராம மக்களுடன் சேர்ந்து கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வைத்துள்ளார்.
மேலும் இந்த கோயிலின் வடக்கு பகுதியில் அனைவரையும் காவல் காக்கும் பத்திரகாளி அம்மனுக்கு சிறிய ஆலயமொன்று அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1880 ஆம் ஆண்டு சுண்ணாம்புக் கற்களினால் ஆகம விதிகளுடனுடன் இக்கோயில் கட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
புனரமைப்பு பணிகளின் விவரம்
1931 ஆம் ஆண்டு கருவறையில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாளும், இரண்டாம் மண்டபத்தில் வடக்குப் புறத்தில் தெற்கு முகமாக, தெற்கு வாசலின் ஊடாகச் சமுத்திரத்தை நோக்கிய படி கண்ணகி அம்பாளும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.
1944 ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாக குடமுழுக்கு நடத்தப்பட்டு, கடந்த 1957 ஆம் ஆண்டு சுண்ணாம்பு கட்டிடம் நிரந்தர கட்டிடமாக்கப்பட்டது. அத்துடன் ராஜகோபுரம் மற்றும் சித்திரத்தேர் பணிகளும் செய்யப்பட்டன. 1964 ஆம் ஆண்டு மீண்டும் குடமுழுக்கும் நடத்தப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு
சிலப்பதிகாரப் பெருவிழா இக்கோயிலில் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |