மிகவும் முக்கியமான புரட்டாசி கடைசி சனிக்கிழமை வழிபாடு
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம்.புரட்டாசி மாதம் தொடங்கி அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெற்றது.அந்த வகையில் இன்று(12.11.2024)புரட்டாசி கடைசி சனிக்கிழமை.இது இன்னும் விஷேசமாக கருதப்படுகிறது.அப்படியாக புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் நாம் வழிபாடு செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
அன்றைய தினம் வழக்கம் போல் வீடுகள் மற்றும் பூஜை அறைகளை சுத்தம் செய்து பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான துளசி மாலையை தாயாருக்கும் பெருமாளும் சாற்றி பூஜையை தொடங்க வேண்டும்.மேலும் பூஜை அறையில் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்கலாம்.
பிறகு முழுமுதற் கடவுளான விநாயக பெருமானை தொழுது குலதெய்வத்திடம் வேண்டியது நிறைவேற பிரார்த்தனை செய்திட வேண்டும். இந்த பூஜைகளை நல்ல நேரம் பார்த்து தொடங்க வேண்டும்.மிக முக்கியமாக பெருமாளுக்கு மாவிளக்கேற்றி பூஜை செய்வது சிறப்பான பலன்களை தரும்.
சர்க்கரைப்பொங்கல், வடை எள் சாதத்தை இவைகளை நைவேத்தியமாக படையலிடலாம்.அரிசிமாவு, வெல்லம் கலந்த மாவில் சிறிது இளநீர் விட்டு பிசைந்து தீபம் செய்து அதில் சுத்த நெய் கொண்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம்.இயலாதவர்கள் அவர்களுடைய வழக்கப்படி பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும்.
பூஜை முடிந்ததும் தேங்காய் சேர்த்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கவேண்டும்.அத்துடன் துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் என கலந்த சாதங்கள் செய்வதும் சிறப்பு.
சனிக்கிழமைகளில் பெருமாளை துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது வாழ்க்கையில் ஒரு சிறந்த பலன்களை தரும்.இப்படி செய்வதால் குலதெய்வத்தின் பரிபூர்ண அருள் கிடைப்பதோடு வீட்டில் உள்ள கஷ்டங்கள் படிப்படியாக குறைந்து மகிழ்ச்சி நிலவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |