பூர்வ ஜென்ம சாபம் போக்கும் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை வழிபாடு

By Sakthi Raj Sep 28, 2024 08:30 AM GMT
Report

மிகவும் விசேஷமான புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாடு எங்கும் மிக சிறப்பாக நடைபெறும்.அப்படியாக இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை அதோடு சேர்த்து பெருமாளுக்கு உரிய திதியான ஏகதாசியோடு சேர்ந்து வந்து இருப்பது கூடுதல் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

இன்றைய தினத்தில் பெருமாளை வழிபாடு செய்தல் சகல நன்மைகளும் கிடைக்கிறது.அதை பற்றி பார்ப்போம். இந்த நாளில் நாம் மறக்காமல் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட முன் ஜென்ம சாபங்களும் கர்ம வினைகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய ஏகாதசி திதி அன்று பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதேபோல் புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் பெருமாளை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் அதிகம் உண்டு.

பூர்வ ஜென்ம சாபம் போக்கும் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை வழிபாடு | Purattasi Month Worship

ஆனால் இன்று சிறப்பான இரண்டு விஷயம் சேர்ந்து வரக்கூடிய நாளாக இருப்பதால் கட்டாயம் நாம் பெருமாள் கோயிலுக்கு சென்று மனதார அவரை வணங்க சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். பொதுவாக ஏகாதசி திதி அன்று விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்பவர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்க பெற்று வைகுண்டம் அடைவார்கள் என்று புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ராசியினர் வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள்

ஒவ்வொரு ராசியினர் வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள்


இவ்வளவு சிறப்பான இன்றைய தினத்தில் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய கருடாழ்வாருக்கு முதலில் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு பெருமாளுக்கு துளசி மாலையும் தாயாருக்கு வாசனை மிகுந்த மலர்களையும் வாங்கித் தர வேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமி தாயாருக்கு மஞ்சளை வாங்கி தருவது என்பது நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகளை உண்டாகும். இந்த வழிபாட்டை முடித்த பிறகு அங்கு இருக்கக்கூடிய ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அவரை 21 முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.

பூர்வ ஜென்ம சாபம் போக்கும் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை வழிபாடு | Purattasi Month Worship

இந்த முறையில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கர்ம வினைகள் நீங்கி தோஷ நிவர்த்தி ஆகும் என்பது நம்பிக்கை. இதோடு மட்டுமல்லாமல் சக்கரத்தாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து 27 முறை அவரை வலம் வந்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

சக்கரத்தாழ்வார் நரசிம்மர் ஆலயத்தில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் நரசிம்மர் ஆலயம் இருந்தாலும் பெருமாள் ஆலயம் இருந்தாலும் இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய முன் ஜென்ம சாபங்களும் கர்ம வினைகளும் நீங்கும் என்பது உறுதி.

ஆக இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாளில் நம்முடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு சிறிது நேரம் பெருமாளுக்காக செலவிட வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US