திருப்பதி கோவிலில் தோஷ நிவர்த்திக்காக புஷ்ப யாக பூஜை
திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா தோஷ நிவர்த்திக்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரத்தில் சாமிக்கு புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.
அதன்படி நேற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திர அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
தமிழகத்திலிருந்து 5 டன் மலர்களும், கர்நாடகாவில் இருந்து 2 டன் மலர்களும், திருப்பதி தேவஸ்தான புஷ்பவனத்தில் இருந்து 2 டன் மலர்களும் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து மதியம் 1 மணிக்கு சாமந்தி, சம்பங்கி, தாமரை துளசி, மருவம், தவனம்,வில்வம் உள்ளிட்ட 17 வகையான மலர்கள் 6 வகையான இலைகள் ஆகிய 9 டன் மலர்கள் கொண்டு புஷ்ப யாகம் நடந்தது.
அப்போது வேத பண்டிதர்கள் ரிக் வேதம், யஜூர் வேதம், கிருஷ்ணயஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம், பாராயணம் உள்ளிட்ட வேத மந்திரங்களை ஓதினர்.
திருப்பதியில் நேற்று 73,558 பேர் தரிசனம் செய்தனர். 32,675 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.79 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |