புதன் உதயத்தால் உருவாகும் யோகம்-எந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் காத்திருக்கிறது
நவகிரகங்களில் இளவரசனாக இருக்கக்கூடியவர் புதன் பகவான்.இவர் ஒரு மாற்றத்திற்கு குறைவான காலத்தில் அவர் ராசியை மாற்ற கூடியவர்.புதன் பகவான் தான் ஒருவருடைய படிப்பு வியாபரம் கல்வி போன்றவைக்கு காரணியாக விளங்கக்கூடியவர்.
அப்படியாக புதன் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது 12 ராசிகளுக்கும் அதன் தாக்கம் உண்டாகும்.அந்த வகையில் புதன் பகவான் பிப்ரவரி 25 ஆம் தேதி கும்ப ராசியில் உதயமாகிறார்.இதனால் எந்த ராசிகளுக்கு மிக பெரிய தாக்கத்தை உருவாக்க போகிறது என்று பார்ப்போம்.
ரிஷபம்:
புதன் பகவானின் இந்த உதயம் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றம் கிடைக்கும்.ஒரு சிலருக்கு புதிய தொழிலில் தொடங்கும் யோகம் உண்டாகும்.திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்,திருமணம் ஆனவர்களுக்கு திருமண பந்தத்தில் நல்ல உறவு உருவாகும்.குழந்தை பாக்கியம் இந்த காலகட்டத்தில் கிடைக்கும்.
மிதுனம்:
புதன் பகவானின் இந்த உதயம் மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சி உண்டாக்கும்.இந்த காலகட்டத்தில் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள்.ஒரு சிலருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வுகள் கிடைக்கும்.குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
சிம்மம்:
புதன் பகவானின் இந்த உதயம் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல மாற்றம் காண்பார்கள்.தாய் வழி உறவால் நல்ல ஆதரவு கிடைக்கும்.குழந்தைகள் படிப்பில் அக்கறை செலுத்துவீர்கள்.வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.மனதில் நிம்மதி உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |