ராகு பெயர்ச்சி பலன்கள் 2025: எந்த ராசிக்கு மிக பெரிய முன்னேற்றம் கொடுக்க போகிறது
ஜோதிட சாஸ்திரப்படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்பொழுதும் பின்னோக்கிய பயணத்தை செய்யக்கூடியவர். அதே போல் ராகு பகவானுக்கு சொந்த ராசி என்று கிடையாது. ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுக்கிறது.
மேலும், சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக செல்லக்கூடிய கிரகம் என்றால் அது ராகு பகவான் ஆவார். ராகு பகவான் தற்பொழுது குரு பகவானின் சொந்த ராசியான மீன ராசியில் இருக்கிறார். அவர், மே மாதத்தில் ராகு பகவான் சனி பகவானின் கும்ப ராசிக்கு செல்கிறார்.
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கு ஒரு வித தாக்கத்தை உண்டாக்கும். அப்படியாக இந்த ராகு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் மிக பெரிய அதிர்ஷ்டத்தையும் வாழ்க்கையில் மாற்றத்தை பெற போகிறார்கள் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு ராகு பெயர்ச்சி 11வது வீட்டில் நிகழ்கின்றது. இதனால் இவர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். நினைத்த காரியத்தை சாதிக்கும் திறன் கிடைக்கும். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்குகள் நல்ல முடிவை பெரும். தொழில் ரீதியாக உண்டான மன உளைச்சல் விலகும்.
கன்னி:
கன்னி ராசிக்கு ராகு பெயர்ச்சி 6வது வீட்டில் நிகழவுள்ளது. இதனால் கன்னி ராசிக்கு இத்தனை நாள் உண்டான வாழ்க்கை பிரச்சனைகள் நல்ல முடிவை பெரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். உடல் ஆரோக்கியத்தில் உண்டான சிக்கல் விலகும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.
தனுசு:
தனுசு ராசிக்கு ராகு பெயர்ச்சி 6வது வீட்டில் நிகழவுள்ளது. இதனால் நம் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை தொடர்பான விஷயங்களில் நல்ல மாற்றம் உண்டாகிறது. மனதில் அமைதி உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |