2025 ராதா அஷ்டமி எப்பொழுது? அன்றைய தினம் செய்யவேண்டிய வழிபாடுகள்
கிருஷ்ணர் என்றால் நமக்கு கட்டாயம் ராதையும் நினைவுக்கு வருவாள். அப்படியாக அவளை போற்றி கொண்டாடும் வகையில் ராதை பிறந்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ராதா அஷ்டமி என்று கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு ராதா அஷ்டமி வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று வருகிறது.
ராதா பிறந்த இந்த புனித தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு கோயில்களில் பூஜைகளும் பஜனைகளும் நடைபெறும். இந்த நாளில் நாம் வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக காலை 11.05 மணி முதல் பிற்பகல் 1.38 மணி வரை 2 மணி நேரம் 33 நிமிடங்கள் இருக்கிறது.
வைணவத்தில் ராதா தேவி அவர்கள் அனைவரும் மனதிலும் இடம் பிடித்த ஒரு முக்கியமான பெண்மணி ஆவாள். இவள் கிருஷ்ணனுடைய முதன்மையான மனைவியும் ஆவாள். அப்படியாக ராதா தேவி அவதரித்த நாளில் நாம் அவளை வழிபாடு செய்யும் பொழுது நம் மனதில் கள்ளம் கபடம் இல்லாத அன்பும் தூய வாழ்வும் கிடைக்கப்பெறுகின்றோம்.
பலரும் இந்த நாட்களில் விரதம் இருந்து கிருஷ்ணன் ராதையை வழிபாடு செய்வார்கள். மேலும் பல ஊர்களில் கிருஷ்ணன் ராதை சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று வழிபாடு நடத்துவதையும் நாம் காணலாம்.
இந்த நாளில் ராதையை நாம் மனதார வழிபாடு செய்யும் பொழுது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைகிறது. அதே போல் திருமணமாகாதவர்களுக்கு நல்ல அன்பான வாழ்க்கைத் துணை கிடைக்கின்றது. ஆதலால் இந்த வருடம் வருகின்ற ராதா அஷ்டமியை மறக்காமல் வழிபாடு செய்து கண்ணன் ராதையின் அருளைப் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







