ராகு குரு ஆட்டத்தால் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகளை பெரும் ராசிகள்
ஜோதிடத்தில் கிரகங்களுடைய மாற்றங்கள் தான் நம்முடைய வாழ்க்கையில் திருப்புமுனைகளை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், தற்பொழுது கும்ப ராசியில் இருக்கக்கூடிய ராகுவை மிதுன ராசியில் உள்ள குருபகவான் பார்வை இடுகிறார். இது ஜூன் மூன்றாம் தேதி வரை தொடர்கிறது. அதாவது நிழல் கிரகமாக இருக்கக்கூடிய ராகுவை குரு பார்ப்பது சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கிறது.
இதனால் இவர்களுக்கு வெளிநாட்டில் வேலை அல்லது வேற்று மொழி பேசக்கூடிய நபர்களின் அறிமுகம், மாணவர்களுக்கு வெளிநாடு சென்று படிக்கக்கூடிய யோகம் போன்றவை உருவாகும். அப்படியாக எந்த ராசியினர் இந்த குரு ராகு பார்வையால் அதிர்ஷ்டம் பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு ராகுவின் பார்வை இவர்களுக்கு உயர் கல்வியில் ஏற்பட்ட தடைகளை நீக்க போகிறது. தொழில் மற்றும் வேலை ரீதியாக திடீர் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகளை பெறுவார்கள். தொழில் செய்பவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்யக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். இந்த காலகட்டங்களில் திடீர் லாபத்தால் மிகப்பெரிய அளவில் செல்வந்தராக கூடிய சூழ்நிலை உருவாகலாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குரு மற்றும் ராகு பார்வை இவர்களுக்கு கண்டிப்பாக வெளிநாட்டிலிருந்து வருமானம் வரக்கூடிய யோகத்தை கொடுக்க போகிறது. ஒரு சிலர் வெளிநாட்டிற்கு குடியேற வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமான பலன்களை கொடுக்கும். மேலும், ஒரு சிலருக்கு பதவி உயர்வு போன்ற திடீர் வேலை மாற்றங்கள் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் ராகுவின் பார்வை இவர்களுக்கு சாதாரண முயற்சியிலே வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். ஒரு சிலர் வியாபாரம் மற்றும் தொழில் ரீதியாக வெளிநாட்டு ஒப்பந்தங்கள் போடக்கூடிய சூழ்நிலை உருவாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு எதிர்பார்த்தது போல் வெளிநாட்டில் வசிக்கக்கூடிய வரன் அமையும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |