உங்கள் ஜாதகத்தில் ராகு எந்த இடத்தில் இருக்கிறார்.. அதற்கான பலன் இதோ

By Sakthi Raj May 12, 2026 08:00 AM GMT
Report

ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதக்கூடிய ராகு மற்றும் கேது பகவான் இவர்களுடைய தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும். மேலும், ராகு பிரம்மாண்டத்தை குறிக்கக்கூடியவராகவும், கேது ஞானத்தை வழங்க கூடியவராகவும் குறிக்கப்படுகிறது.

முதலில் எந்த ஒரு விஷயத்தையும் பிரம்மாண்டமான கண்ணோட்டத்தை கொடுத்து பிறகு அது ஒன்றும் இல்லை என்பது போல் ஆக்கக்கூடிய நிலையை கேது பகவான் கொடுத்து விடுகிறார். ஆக, இவர்கள் இருவரும் நம்முடைய ஜாதகத்தில் எந்த கட்டங்களில் அமர்ந்திருக்கிறாரோ அதனை பொறுத்து நம் வாழ்க்கை மாறுபடுகிறது.

அப்படியாக, மேஷ ராசியில் ராகு அமர்ந்திருக்கிறார் என்றால் அந்த நபர்களுக்கு இளைய சகோதரரை விட்டு தூரமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு சாகோதரர் அருகில் இருந்த சில ஆரோக்கிய பிரச்சனையை கொடுத்து விடும்.

ரிஷபத்தில் சூரியன் பெயர்ச்சி : மே 15 முதல் இந்த 3 ராசிகளுக்கு சொகுசு வாழ்க்கை உறுதி!

ரிஷபத்தில் சூரியன் பெயர்ச்சி : மே 15 முதல் இந்த 3 ராசிகளுக்கு சொகுசு வாழ்க்கை உறுதி!

அதுமட்டுமல்லாமல் ராகு அமர்ந்த வீட்டினுடைய காரகத்துவத்தை எடுத்துகிறது. அதாவது பொருள் சேரக்கூடிய அமைப்பில் இருந்தால் பொருள் சேர்ந்து கொண்டே போகும். அதைப்போல், உடலை குறிக்கக்கூடிய இடத்தில் ராகு இருந்தால் பின் விளைவுகளையும் கொடுக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.

சுக்கிரன் வீடுகளில் ராகு அமர்ந்திருக்கிறது என்றால் அவருக்கு வாழ்க்கை துணை தூர தேசத்திலிருந்து வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது அல்லது வேறு ஒரு இடத்தில் பிறந்து வேறு ஒரு இடத்தில் வளர்ந்திருக்கக் கூடிய அமைப்பை அவர்கள் பெற்றிருப்பார்கள்.

அப்படியாக, 12 ராசிகளில் எந்த இடத்தில் ராகு அமர்ந்து இருந்தால் என்ன பலன் என்பதை இந்த காணொளிகள் முழுமையாக பார்ப்போம்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US