2026: 18 மாதம் பிறகு நிகழும் ராகு கேது பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு வரவிருக்கும் நற்செய்திகள் என்ன?

By Sakthi Raj Nov 21, 2026 09:25 AM GMT
Report

இந்த பராபவ வருடத்தில் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் டிசம்பர் 5, 2026 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இதில் கேது பகவான் சிம்மத்தில் இருந்து கடகத்திற்கும், ராகு பகவான் கும்பத்தில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்.

இவை குறிப்பிட்ட ஒரு சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ இருப்பதாக சொல்லப்படுகிறது. ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் மாற்றங்களை சந்திக்க கூடிய ராசிகள் யார் என்று பார்ப்போம்.

பகவத் கீதை: பயம் உங்கள் முடிவுகளைத் தடுக்கிறதா? கிருஷ்ணர் கூறும் முக்கிய அறிவுரை

பகவத் கீதை: பயம் உங்கள் முடிவுகளைத் தடுக்கிறதா? கிருஷ்ணர் கூறும் முக்கிய அறிவுரை

2026: 18 மாதம் பிறகு நிகழும் ராகு கேது பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு வரவிருக்கும் நற்செய்திகள் என்ன? | Rahu Ketu Transit December 5 2026 Prediction

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு பத்தாம் இடத்தில் ராகுவும் நான்காம் இடத்தில் கேதுவும் வரக்கூடிய காலகட்டமாகும். இதனால் மனதில் இருந்து வந்த பயம் விலகி தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கப் போகிறது.

வேலை செய்யும் இடங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். உங்களுடைய திறமை வெளிப்படும். வேலையில் எதிர்பார்த்த இடம் மாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் உடைய வார்த்தைகளுக்கு மிகப் பெரிய அளவில் மதிப்பு கொடுத்து செயல்படுவீர்கள்.

வீடு வாகனம் புதுப்பிக்கக்கூடிய யோகம் உண்டு. இனிமையான பேச்சு உங்களுடைய இல்லங்களை மகிழ்ச்சியானதாக மாற்றும். கூட்டுத் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் இடத்திற்கு ராகுவும் மூன்றாம் இடத்திற்கு கேதுவும் வரக்கூடிய காலகட்டமாகும். தேவை இல்லாமல் புறம் பேசும் நபர்களை தள்ளி வைப்பது நல்லது. எந்த செயல்களையும் திட்டமிட்டு நேரம் தவறாமல் செய்வது மிக மிக அவசியம்.

குழந்தைகளால் பெருமைகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும். வீடு வாகனம் வாங்கவும் விற்கவும் நல்ல யோகம் உருவாகும். செய்யும் தொழிலில் உங்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும்.

யாருடைய வற்புறுத்தலுக்காகவும் தெரியாத தொழிலில் இந்த நேரங்களில் கால் வைப்பதில் மட்டும் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். மற்றும் அரசு அரசியல் சார்ந்தவர்கள் விஷயங்களில் கவனமாக தலையிடுவது வேண்டும்.

ஜோதிடம் என்பது ஒருவகை எச்சரிக்கை.. சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அழிவு நிச்சயம்

ஜோதிடம் என்பது ஒருவகை எச்சரிக்கை.. சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அழிவு நிச்சயம்

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடத்தில் ராகு மற்றும் ஒன்பதாமிடத்தில் கேதுவரக்கூடிய காலகட்டமாகும். இந்த காலகட்டங்களில் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளிநாடு மற்றும் வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். அனுபவம் மிக்கவர்களுடைய ஆலோசனைகளை நீங்கள் பெறுவீர்கள். இல்லங்களில் இனிமையான பேச்சு உருவாகும்.

இந்த காலகட்டங்களில் உறவு நட்பு உங்கள் குடும்ப விஷயங்களை தலையிடாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே உங்களுக்கு நன்மையைச் செய்யும். சுப காரிய தடைகள் விலகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்துகளால் நல்ல லாபம் கிடைக்கும்.மாணவர்கள் படிப்பில் தேவையில்லாத நேரத்தை வீணெடுக்காமல் கவனமாக செலவிட்டு படிக்கும் பொழுது உயர்ந்த நிலைக்கு செல்லலாம். 

 Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US