பகவத் கீதை: பயம் உங்கள் முடிவுகளைத் தடுக்கிறதா? கிருஷ்ணர் கூறும் முக்கிய அறிவுரை
ஒரு மனிதனை மிகப்பெரிய முடிவுகள் எடுக்கவிடாமல் தடையாக இருப்பது பல நேரங்களில் அவர்களின் பயமாகவே உள்ளது. இந்த பயம் என்பது வெளிப்படையாக தெரியாமல் அமைதியாகவே ஒருவருடைய முடிவுகளை பாதிக்கக் கூடியதாக இருக்கலாம்.
அதாவது, ஒருவர் பயத்தின் காரணமாக ஒரு வேலையை செய்யலாம், இன்னொருவர் பயத்தினால் அவர்களுடைய கருத்துக்களை சொல்லாமல் அமைதியாக இருக்கலாம். இன்னொருவர் பயத்தின் காரணமாக அவர்களுக்கு ஏற்படக்கூடிய அவமானங்களையும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்ளலாம்.
ஒரு சிலர் முயற்சியே செய்யாமல் தோல்வி வந்து விடுமோ என்ற பயத்தில் கனவுகளை தள்ளிப் போடலாம். இவ்வாறான மனித சிக்கல்களுக்கு பகவான் கிருஷ்ணர் அவருடைய போதனைகள் வழியாக ஒரு சிறந்த வாழ்க்கை பாடத்தை எடுத்துரைக்கிறார்.

அதாவது ஒருவருடைய மனம் விளைவுகள், இழப்புகள் மற்றவர்களுடைய மதிப்பீடுகள் மற்றும் வசதிகள் ஆகியவற்றின் மீது அவர்கள் பற்று வைக்கின்ற பொழுது பயம் அதிகரிக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் ஒருவருடைய மனதில் பயம் அதிகமாக இருந்தால் சிறிய முடிவை கூட அவர்கள் பெரிய போராட்டமாக உணரக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
பயம் ஏன் நம்முடைய முடிவுகளைக் கட்டுப்படுத்துகிறது?
பயம் சில நேரங்களில் நம்மை பாதுகாப்பதாக இருந்தாலும் அது நம்முடைய வளர்ச்சிக்கு தடையாகவே மாறி விடுகிறது. சில மாணவர்கள் தோல்வி பயத்தினால் தேர்வுகளை தவிர்க்கலாம்.
அலுவலகத்தில் பயத்தினால் அவர்களுடைய உரிமைகளை கேட்க தயங்கலாம். புதிய முயற்சிகளை துவங்காமல் தள்ளி போடலாம். ஆக, பயம் நம்முடைய வளர்ச்சியை தடுத்து ஒரு வசதியான எல்லைக்குளையே நம்மை வைத்திருக்கிறது.
கிருஷ்ணர் கூறும் வாழ்க்கைப் பாடம்:
பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்லக்கூடிய ஒரு முக்கியமான கருத்து விளைவுகளைப் பற்றி பயமின்றி அறிவுடன் செயல்படுவதே ஆகும். அதாவது எதையும் அவசரமாக செய்யாமல் நிதானமாக ஆராய்ந்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

அப்படியாக, பயம் தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வது?
அதாவது ஒரு விஷயத்தின் மீது நாம் அதிக அளவில் பற்று வைக்கின்ற பொழுது தான் இந்த பயமானது நம்மை கட்டுப்படுத்த தொடங்குகிறது. ஆக, பயம் நம்மை ஆள அனுமதிக்காமல் இருப்பது நமக்கு வெற்றியை கொடுக்கும்.
அதனால் எந்த நேரத்திலும் பயத்தின் அடிப்படையில் ஒரு முடிவுகளை எடுக்காமல் தெளிவான சிந்தனையின் அடிப்படையில் எடுப்பது அவசியமாக இருக்கிறது. பகவத்கீதையில் தைரியம் என்பது ஒருவருக்கு பயமே இல்லாமல் இருப்பது இல்லை.
தைரியம் என்பது பயத்தை விட அறிவிற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து நேர்மையுடன் செயல்படுவதை ஆகும் என்று எடுத்துரைக்கிறது.
குறிப்பு:
இது ஆன்மீக மற்றும் பொதுவான தகவல் நோக்கத்திற்கான உள்ளடக்கம் மட்டுமே. தொடர்ந்து மனச்சோர்வு, பதட்டம், தூக்கமின்மை, அல்லது மனநல பிரச்சனைகள் இருந்தால் மன நல மருத்துவரை அணுகுவது நல்லது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |