18 ஆண்டுகளுக்குப் பின்.. புதனுடன் ராகு - வறுமையில் தப்பிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!
பிப்ரவரி 2026ல் புதன், ராகு சேர்க்கை நிகழ உள்ளது. இந்த சேர்க்கை 18 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் நடக்கப் போகிறது. இதன் விளைவாக, சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.

மேஷம்
முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் பெறுவீர்கள். இதனால், உங்கள் வருமானம் கணிசமாக உயரும். கடந்த காலம் செய்த பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கத் தொடங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் இருந்தும் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
மிதுனம்
அதிர்ஷ்டம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வேலையில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு அல்லது பெரிய பொறுப்புகள் கிடைக்கும். எந்த வேலையைச் செய்தாலும் அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
கும்பம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் நல்ல பதவி உயர்வு பெறுவீர்கள். சொந்தமாக தொழில் செய்து வருப்பவர்களுக்கு வருமானம் உயரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்களிடையே பெயர், புகழ், மரியாதை அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும்.