எதிரியாகவே இருந்தாலும் இந்த செயலை செய்ய தயங்காதீர்கள்

By Sakthi Raj Jan 23, 2025 12:43 PM GMT
Report

உலகத்தில் மனிதன் அறிந்து வியந்திடத்தான் எத்தனை விஷயங்கள் உள்ளது.அதில் நல்லது தேடி நாம் தெரிந்து கொண்டாலே நம்முடைய ஆன்மா மேன்மை அடையும்.அப்படியாக உலகம் போற்றிடும் ராமாயணத்தை ஒருவர் படித்திட அவர்களுக்கு வாழ்க்கையில் பொறுமையின் ரகசியத்தையும்,அன்பால் நிகழும் அதிசயமும்,ஒழுக்கத்தால் கிடைக்கும் வெற்றியையும் தெரிந்து கொள்ள முடியும்.

அப்படியாக அன்றொரு நாள்,வில்வித்தையில் சிறந்த ராமன் வீசிய அம்பில் காயப்பட்டு உயிருக்கு போராடும் தருவாயில் அவரின் தம்பியான லட்சுமணனை பார்த்து ராமன் சொல்கிறார்.லட்சுமணா ராவணன் மிகவும் திறமைசாலி.அனைத்துக் கலைகளையும் சிறந்தவன்,ராஜதந்திரம் கொண்டவன்.

நிச்சயம் நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.ஆக நீ அவனிடம் சென்று நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். அண்ணன் சொன்னபடியே லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் ஒரு போதும் உன்னோடு அழிந்துவிடக்கூடாது.

எதிரியாகவே இருந்தாலும் இந்த செயலை செய்ய தயங்காதீர்கள் | Ramayanam Ravanan Conversation

அதை நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான். உயிர் பிரிய போகும் தருவாயிலும் கூட லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன்,அவனின் அண்ணன் ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மனமகிழ்ச்சியுடன் அவரின் அறிவுரைகளைச் சொன்னான்.

லட்சுமணா ஒரு காலத்தில் நாம் சர்வ வல்லமை படைத்தவனாக உலா வந்தேன்.அனைவரையும் ஆட்டி படைக்கும் நவக்கிரகங்களும் எமனும் ஏன் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர்.அப்போது என்னுடைய விரும்பம் என்ன தெரியுமா? நாட்டில் பிறக்கும் உயிர்கள் அனைத்தும் சொர்க்கம் செல்ல வேண்டும்.

வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் விலக செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு

வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் விலக செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு

நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால் நான் அந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே போனேன்.

அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன். ஒரு நாள் சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம்.அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம். அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.

எதிரியாகவே இருந்தாலும் இந்த செயலை செய்ய தயங்காதீர்கள் | Ramayanam Ravanan Conversation

1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.

2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.

3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.

4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.

ஆக இராவணன் ராமனின் எதிரியாகவே இருந்தாலும் அவனின் நற்பண்புகளை மறுக்கவில்லை.ஆதலால் தான் அவனின் இறுதிக்கட்டத்திலும் அதை கேட்டு தெரிந்து கொள்ள விரும்பினார்கள்.அதே போல் நாமும் இருக்கவேண்டும்.

எதிரியாகவே இருக்கட்டும்,ஆனால் ஒரு பொழுதும் அவர்களின் நற்பண்புகளை நாம் மறுக்கக்கூடாது.சூழ்நிலையால் தான் இங்கு வெறுப்புகள் உருவாகிறது என்றாலும் ஒருவரின் நல்ல விஷயங்களை பாராட்ட தயங்க கூடாது.

ஜெய் ஸ்ரீ ராம்   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US