இராமாயணம்: சீதா தேவியிடம் இருந்து நாம் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டிய 3 விஷயங்கள்
இந்த உலகத்தில் ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் அதிக அளவிலான அன்பும் கோபத்தை வெளிக்காட்டுவார்கள். அதிலும், குறிப்பாக பெண்களுக்கு ஏதேனும் அநீதி நடந்து விட்டால் அவர்கள் கட்டாயம் அதற்கான குரலைக் கொடுப்பார்கள்.
இது அவர்களின் ஒருவகையான அற்புத ஆற்றல் என்றாலும், இன்னொரு சக்தி வாய்ந்த ஆற்றல் இருக்கிறது. அது தான் அமைதி. உலகம் போற்றும் காவியத்தில் சீதா தேவி அவர்களுக்கு எத்தனை பெரிய துன்பம் நெருக்கிய பொழுதும் கத்தி கூச்சல் எழுப்பவில்லை.
அவர்களின் அமைதியை ஆயுதமாக பயன்படுத்தினார்கள். அவர்களின் அமைதி சீதா தேவியின் சுயமரியாதையும், அவர்களின் மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது. அப்படியாக, இராமாயணத்தில் சீதா தேவியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 3 விஷயங்களை பற்றிப்பார்ப்போம்.
1. சீதா தேவி எப்பொழுதும் அவர்களின் ஒழுக்கத்தையும் மதிப்பையும் வெளிப்படுத்த சண்டையிட வில்லை. அவர்கள் எல்லா சூழ்நிலையிலும் அமைதியை பின்பற்றினார்கள். சீதாதேவிக்கு அவர்களின் மரியாதையை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டும் என்று கட்டாயம் இல்லை.
காரணம், சீதா தேவி தான் யார் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார். அதனால் தான் நெருப்பில் இறங்கி தன்னை நிரூபிக்க சொன்ன போதிலும் அமைதியாக செய்தார். சத்தமும் கூச்சலும் நிறைந்த உலகத்திற்கு தன்னை யாரும் வெல்லமுடியாது என்பதை அமைதியாக நிரூபித்தி காட்டினார்.
2. இந்த உலகத்தில் பலரும் அவர்களுக்கு நடக்கும் காயங்களை வெறுப்பாக மாற்றி விடுவார்கள். உலகத்திடம் மிகவும் கடிந்து நடந்து கொள்வார்கள். துன்பம் இழைத்தவர்களை பழிவாங்க வேண்டும் என்றும் எண்ணம் கொண்டு இருப்பார்கள்.
அனால், சீதா தேவி எந்த சூழ்நிலையிலும் அவர்களுடைய வெறுப்பை பழிவாங்கும் செயலாக மாற்றவில்லை. ஸ்ரீ ராமர் மீது எந்த கோபமும் கொள்ளவில்லை. ஏன் சீதா தேவியின் பிள்ளைகளிடமும் ஸ்ரீ ராமரை பற்றிய தவறான கருத்துக்களை விதைக்க வில்லை. அவர்களுடைய வலியை ஒரு பொழுதும் தவறாக யாரிடமும் காட்டவில்லை. இது சீதா தேவியின் தெய்வீக தன்மையை உணர்த்துகிறது.
3. சமயங்களில் சீதா தேவி அமைதியில் உறைந்து விட்டதுப் போல் தோன்றும். ஆனால், சீதா தேவி அவர்களின் அமைதியை அவர்களின் மன வலியில் இருந்து வெளியே வர பயன்படுத்திக்கொண்டார். அவர் பேசவில்லை என்பதற்காக அவர்களால் பேச முடியவில்லை என்பது இல்லை. வலியிடம் சென்று போராடுவதை காட்டிலும் உண்மையை உறைவிடமாக ஏற்றுக்கொள்வோம் என்று காத்திருந்தார்.
ஆக, நாம் எல்லா நேரத்திலும் இந்த உலகத்திடம் சண்டையிட்டு போராட வேண்டும் என்பது இல்லை. சமயங்களில் அமைதியை முழு மந்திரமாக ஏற்றுக்கொண்டால் இன்னும் வலிமை அடையலாம். இந்த உலகத்தில் உண்மை எப்பொழுதும் துள்ளுவதில்லை. அதனால் பொறுத்தார் கட்டாயம் பூமி ஆள்வார். உலகம் அவர்களை நிச்சயம் ஒரு நாள் போற்றும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







