(06/04/2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

By Sakthi Raj Apr 06, 2024 04:05 AM GMT
Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய ராசிபலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசியினர்களுக்கு இன்று அவர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியில் அமையும். குடும்பத்தினருடைய விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியம் சீராகும் பணவரவில் இருந்த தடைகள் விலகி எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகி பணியாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும் தொழிலில் உங்கள் எண்ணம் நிறைவேறி லாபம் அதிகரிக்கும். மேலும் தொழிலில் உண்டான தடைகளும் விலகி வியாபாரத்தில் விருத்தி அடைவீர்கள். இன்று செல்லும் பயணங்கள் நல்ல முறையில் அமையும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்கள் இன்று மற்றவர் உதவியுடன் பிரச்சனை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும் .செல்வாக்கு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் முன்னேற்றம் காண்பீர்கள் புதிய தொழில் தொடங்குவதை பற்றிய ஆலோசனை செய்வீர்கள்.

(05/04/2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

(05/04/2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

 

கடகம்

கடக ராசி நேயர்களுக்கு இன்று மனதில் இருந்த குழப்பம் விலகி தன்னம்பிக்கை உண்டாகும்.செல்லும் பயணத்தில் தடை தோன்றும். மனக்குழப்பம் அதிகரிக்கும். ஆதலால் வரவு செலவுகளில் கவனம் தேவை. பணவரவில் ஏற்பட்ட நெருக்கடிகள் அகன்று குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களுள் இடையில் ஏற்பட்ட கசப்புகள் நீங்கும் உறவினர்களால் ஆதரவு அதிகரிக்கும். 

கன்னி

கன்னி ராசி நேயர்களுக்கு இன்று உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் மறையும். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட தொல்லை விலகும் .நினைத்த காரியம் நிறைவேறும். மறைமுகமாக தொல்லை தந்தவர் விட்டு விலகுவர். உங்கள் நிலை இன்று உயரும்.

துலாம்

துலாம் ராசி நேயர்கள் இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு செயலில் வெற்றி அடையும் நாள் .உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்திலிருந்த நெருக்கடி குறையும் .வேலையில் இருந்து நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் உண்டான குழப்பங்கள் விலகி மனதில் புத்துணர்ச்சி ஏற்படும்.

(04-04-2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

(04-04-2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

 

விருச்சிகம் 

விருச்சிக  ராசி நேயர்களுக்கு இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பலன் குறைவு. உதவி புரிவதாக சொன்னவர் விலகி செல்வர். தாய்வழி உணர்வினர்களால் சில சங்கடம் தோன்றும். பூர்வீக சொத்துப்பற்றிய பேச்சுகளும் தொழிலில் இருந்த தடை விலகும். குடும்ப ஆதரவுடன் நீங்கள் நிம்மதி அடைவீர்கள்.

தனுசு

தனுசு ராசி நேயர்களுக்கு இன்று குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சகோதரர்களால் சில சங்கடம் ஏற்படும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். எதிர்பார்த்த வரவில் தடை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும்.

மகரம்

மகர ராசியில் இன்று பொது நலத்துடன் ஒரு பணியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் எண்ணத்தை நிறைவேற்றி வெற்றி காண்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிகள் உண்டாக்கும்.

 கும்பம்

கும்ப ராசியினர்களுக்கு இன்று தொழில் மற்றும் குடும்பம் இரண்டிலும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் புதிய பாதை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வரும் வரவை வைத்து நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். 

 மீனம்

மீன ராசி நேயர்களுக்கு இன்று அழைச்சல் அதிகரிக்கும். யோசிக்காமல் செய்த செயலால் மன உளைச்சல் உண்டாகலாம். ஜென்ம ராகு ஆசையை அதிகரிப்பார். சட்டத்திற்கு புறம்பான செயல் சங்கடத்தை உண்டாக்கும். செலவு அதிகரித்தாலும் உங்கள் முயற்சி வெற்றிகரமாகும் .நெருக்கடி, ஏற்பட்டாலும் குரு பார்வையால் அது விலகி செல்லும்.

(03-04-2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

(03-04-2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US