ராசி பலன்(19-06-2025)
மேஷம்:
பிறரை நம்பி உங்கள் வேலையை கொடுக்காதீர்கள். தொழிலில் கவனமாக செயல்படாவிட்டால் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து செல்வது நன்மை அளிக்கும்.
ரிஷபம்:
மனதில் தேவை இல்லாத குழப்பத்தால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். திருமண வாழ்வில் சில சிக்கல்ள் உண்டாகும். எதையும் தீர ஆலோசித்து செயல்பட்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மிதுனம்:
தந்தை வழியில் ஏற்பட்ட மன கசப்புகள் விலகி செல்லும். வெளிவட்டாரத்தில் சில அவமானங்கள் சந்திக்க நேரலாம். சகோதரி வழி உறவால் ஆதாயம் உண்டாகும்.
கடகம்:
இன்று வெளியூர் பயணம் நன்மையாக அமையும். உறவுகள் இடையே ஏற்பட்ட விரிசல் விலகும். குடும்பத்தினர் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.
சிம்மம்:
தாய் வழி உறவால் ஆதாயம் பெறுவீர்கள். பிடித்த ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். இறைவழிபாடு வரும் ஆபத்துகளை தவிர்க்கும்.
கன்னி:
நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சில தொந்தரவுகளை சந்திப்பீர்கள். தேவை இல்லாத வாக்கு வாதம் யாரிடமும் செய்யவேண்டாம். திருமண வரன் பார்ப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
துலாம்:
உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவேண்டும். வேலையில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். அதிகாரிகளின் உதவியால் சில விஷயங்களை செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்:
திருச்செந்தூர் முருகனை வழிபட சங்கடம் நீங்கும். அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சாரம். வீண் செலவு கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சனி, ராகுவால் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
தனுசு:
மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் உருவாகும். கணவன் உங்களை புரிந்து நடந்து கொள்வார். உணவு விஷயங்களில் கவனம் தேவை. சிலர் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள்.
மகரம்:
நீதிமன்ற வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும். விட்டு சென்ற உறவுகள் மீண்டும் உங்களை தேடி வரும். படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். அரசு வேலை செய்பவர்களுக்கு நன்மை உண்டாகலாம்.
கும்பம்:
வீட்டில் சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியும். உறவினர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொந்தங்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
மீனம்:
குடும்பத்தில் எதிர்ப்பார்த்த மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். உங்களை விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைவார்கள். தொழில் செய்யும் இடத்தில் உங்களுக்கு சில சங்கடம் உருவாகி மறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |