கனவில் பாம்பு வருகிறதா?காரணம் இது தான் கவனமாக இருங்கள்
ஒருவருடைய வாழ்க்கையில் ஜோதிடம் முக்கிய பங்கு வகிக்கிறது.சமயங்களில் ஜோதிடத்தை நம்பாதவர்களை கூட இந்த காலம் நம்ப வைத்து விடும்.அதே போல் நமக்கு நடக்க இருக்கும் எதிர்கால பற்றிய நிகழ்வுகளையும் நமக்கு இந்த பிரபஞ்சம் எதோ ஒரு வகையில் அறிகுறி காண்பித்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் பலரது கனவில் பாம்பு வருவது உண்டு.எத்தனையோ விலங்குகள் இருந்தும் கனவில் பாம்பு மட்டும் வர காரணம் என்னவென்று யோசித்தால் அதற்கு பின்னால் பல விஷயங்கள் ஒளிந்து இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
ஒரு சிலருக்கு பாம்பு துரத்துவது போலும்,நாம் பாம்பை அடித்து கொள்வது போல் வரும்.இன்னும் சிலருக்கு ஜோடியாக பாம்புகள் வருவதும் உண்டு.இதற்கெல்லாம் காரணம் எவர் ஒருவர் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருக்கிறதோ அவர்களுக்கு இவ்வாறான கனவு அறிகுறி தென்படுவதுண்டு.
மேலும்,ஒருவருக்கு கால சர்ப்ப தோஷம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் 42 வயது காலம் வரை தொடர் துன்பம்,எதை தொட்டாலும் தோல்வியை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பார்கள்.
இருந்தாலும் இந்த கால சர்ப்ப தோஷம் அவர்களுக்கு சுப பலன்களையும் கொடுக்கும். இந்த தடங்கல்களில் இருந்து அவர்கள் விடுதலை பெற சில பரிகாரம் செய்தாலே போதும்.அவ்வாறு தொடர்ந்து சில ஆன்மீக விஷயங்களை கடைபிடிக்க அவர்களுக்கு ஏற்பட்ட காலசர்ப்ப தோஷம் முற்றிலுமாக விலகும்.
அதாவது ஒருவர் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருக்கிறது என்று தெரிந்த பிறகு அவர்கள் விஷ்ணு பகவானை சரண் அடைய வேண்டும்.தினமும் விஷ்னு பகவானை வழிபட வேண்டும்.
அதோடு காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள் ஓனிக்ஸ் அல்லது வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்ட பாம்பு வடிவ மோதிரத்தை அணிவதும் நன்மை பயக்கும்.
மேலும்,ஓடும் நீரில் சிறிது நிலக்கரியை விடுவது மங்களகரமானது. இது, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை குறைக்கும்.ஆக,என்ன தோஷம் ஏற்பட்டு தடங்கல் உண்டானாலும் அவர்கள் தொடர்ந்து வழிபாடு செய்ய நிச்சயம் அந்த இறைவன் அவர்களுக்கு அருள் புரிவார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |