கோயில் சுற்றுச் சுவர் ஏன் சிவப்பு,வெள்ளையாக இருக்கிறது காரணம் தெரியுமா?
நாம் எந்த கோயிலுக்கு சென்றாலும் வெளியில் உள்ள சுற்று சுவர் சிவப்பு வெள்ளையாக இருக்கும்.பெரும்பாலும் அந்த நிறம் வைத்து தான் அது கோயில் என்று நம்மால் உணரமுடியும்.
அப்படி இருக்க கோயிலில் ஏன் சிவப்பு வெள்ளை நிறம் சுவருக்கு கொடுத்திருக்கிறார்கள்.அதன் பின்னால் இருக்கும் தத்துவம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
நம் உடலில் வெள்ளை அணுக்கள் மற்றும் சிகப்பு இரத்த அணுக்கள் உள்ளது. சிகப்பு அணுக்கள் ஆக்சிஜனை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது மற்றும் வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது.
இவை இரண்டும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது. இதை குறிக்க தான் வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களில் கோவில்களில் சுவர்களில் பூசப்பட்டிருக்கிலாம்.
இறைவனின் ஆன்மா மூல ஸ்தானத்தில் இருக்கும். அதனால் தான் அதை கருவறை என்று கூறுகிறார்கள். சுவர்களில் உள்ள வர்ணங்கள் இவைகளை சான்றாக வைத்தும் நமக்கு வாழ்வியலை உணர்த்தும் வைகையில் தான் சிவப்பு வெள்ளை கோயில் சுவருக்கு நிறமாக கொடுங்கப்பட்டு இருக்கிறது.
அறிவியலும் ஆன்மீகமும் மக்களுக்கு உணர்த்துவது பல.நம்முடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழத்தான் இவை அனைத்தும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஆக ஆன்மீக தத்துவங்களை நம்முடைய வாழ்க்கையில் செலுத்தி நிரந்தரமற்ற வாழ்க்கையில் நாம் எல்லாவற்றையும் சந்தோஷமாக எடுத்துக்கொண்டு வாழ பழகிக்கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |