எம் ஜிஆர் முதல் விஜய் வரை.. பிரபலங்கள் படையெடுக்கும் கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் பின்னணி
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்று இருந்த நேரத்தில் அவர் இன்று 12 ஆம் தேதி அங்கிருந்து நேரடியாக கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் இருக்கக்கூடிய கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு மதியம் மூன்று மணிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அப்படியாக, இந்த முகாம்பிகை கோவிலுக்கு பிரபலங்கள் பலரும் செல்வதன் முக்கிய பின்னணி என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
மூகாம்பிகை கோயில் எங்கு உள்ளது?
பெங்களூரில் இருந்து 458 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் கோவில்களில் இந்த கொல்லூர் மூகாம்பிகை கோவிலும் ஒன்று. மகிசாசூரனை வதம் செய்த மூகாம்பிகை அம்மன் எழுந்தருளி உள்ள இந்த ஆலயம், மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவில் கொடசாத்திர மலை அடிவாரத்தில் வற்றாத ஜீவ நதியான சவுபர்னிகா ஆற்றின் கரையில் அமைந்து உள்ளது.

இங்கு மூகாம்பிகை சிவசக்தி சொரூபத்தில் நமக்கு காட்சி கொடுக்கிறார். இங்கு தாய் மூகாம்பிகை அம்மன் ரத்தினை கற்களால் ஆன ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார ரூபினையாக நமக்கு காட்சி கொடுக்கிறார்.
கோயிலுக்கு வரும் பிரபலங்கள்:
பல ஆண்டுகளாகவே இந்த கோவில் தென்னிந்தியாவில் பிரபலங்கள் மத்தியில் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆன எம். ஜி. ராமச்சந்திரன் மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் இந்த கோயிலுக்கு வந்து தரிசனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு, கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த அரசியல்வாதிகளும் தங்களுடைய தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்க இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்ய செய்வது உண்டு. இவ்வாறு பல பிரபலங்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதிலும், கர்நாடகா முதலமைச்சர் டி. கே சிவக்குமார் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் மூகாம்பிகை கோவிலுக்கு தவறாமல் சென்று வழிபாடு செய்து வருவதை நாம் காண முடிகிறது.
அதேபோல், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசனுக்கு நெருங்கிய வட்டாரங்கள் அவர் இந்த கோவிலுக்கு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தவறாமல் மாதம் ஒரு முறையாவது வந்து தரிசிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

முக்கியமாக இசையமைப்பாளர் இளையராஜா இந்த ஆலயத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்ததோடு, 2025 ஆம் ஆண்டு இளையராஜா பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை அம்மனுக்கு சமர்பித்து அவருடைய பக்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதேபோல், பின்னணி பாடகர் ஜே. யேசுதாஸ் அவர்கள் வழிபாட்டையே ஒரு கலை வடிவமாக மாற்றி இருக்கிறார். 2000 ஆண்டு முதல் இந்த பாடகர் தனது பிறந்த நாளை இந்த கோயிலில் கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு ஜனவரி மாதமும் அவர் அம்மனுக்கு முன்பாக அமர்ந்து சங்கீதார்ச்சனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் 2014 ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு சுவாமி தரிசனம் குறிப்பிடத்தக்கது.
அரசியல் தலைவர்கள் படையெடுப்பதன் காரணம்:
இவ்வாறு பிரபலங்கள் எல்லாம் இந்த ஆலயத்திற்கு விடாமல் தவறாமல் வருவதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் முப்பெரும் தேவியர் இருக்கின்றன. கொல்லூர் மூகாம்பிகை அம்மனாக மகாலட்சுமி அதாவது நமக்கு செல்வம், செல்வாக்கையும் வழங்குகிறார். மகா சரஸ்வதி நமக்கு அறிவு மற்றும் அரசியல் சாணக்கியதனத்தில் சிறந்து விளங்குவதற்கான ஆசிர்வாதத்தை கொடுக்கிறார்.
மகா காளி நம்முடைய எதிரிகளை வீழ்த்த கூடிய சக்தியையும் வீரத்தையும் வழங்குகிறார். மேலும், இங்குள்ள சுயம்புலிங்கத்தில் மும்மூர்த்திகளாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் இருக்கின்றனர்.
ஆதலால், ஒரு மனிதனுக்கு அரசியல் வாழ்க்கையில் தேவைப்படக்கூடிய அதிகாரம் செல்வாக்கு மற்றும் சரியான நேரங்களில் முடிவெடுக்கக்கூடிய அந்த பக்குவம் புத்திசாலித்தனம் எதிரிகளை வீழ்த்தக்கூடிய வீரம் ஆகியவற்றை இந்த முப்பெரும் தேவிகள் நமக்கு கொடுப்பதாக பக்தர்கள் நம்பிக்கையோடு வழிபாடு செய்து வருகின்றன.
ஆதலால் இந்த ஆலயத்திற்கு சென்று நாம் என்ன வேண்டுதல் வைத்தாலும் நம்முடைய வேண்டுதல் நிறைவேற்றப்படுவதாக பக்தர்கள் தீராத நம்பிக்கை கொள்கிறார்கள்.

சண்டி ஹோமம் சிறப்புகள்:
இந்த கோவிலில் (சத்ரு சம்ஹாரம்) சண்டி ஹோமம் நடத்தும் போது அரசியலில் எதிர்ப்புகள், துரோகங்கள், மறைமுக தொல்லைகள் எல்லாம் வீழ்த்தப்படுவதாக சொல்லப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள் இந்த கோவிலின் தீவிர பக்தராக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர் தங்கவாள் காணிக்கை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
அதைப்போல், தான் ஜெயலலிதா அவர்களும் தமிழகத்தில் 2025 ஆண்டுகள் முதல்வராக பதவியேற்ற போது 2024 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று அவர் நடத்தி இருக்கிறார். முக்கியமாக ஜெயலலிதா தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் சோதனையான காலகட்டங்களில் இருந்த பொழுது இங்கு வந்து சிறப்பு பூஜைகளும் கோமங்களும் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் சண்டி ஹோமம் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதைப்பற்றி அதிகார தகவல்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |