திருமாங்கல்யம் கட்டும் போது அட்சதை தூவுவது ஏன்?
By Kirthiga
பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொருவடைய வாழ்விலும் சடங்குகள் நடைபெறுகின்றது.
அந்தவகையில் ஒருவருக்கு வாழ்வில் நிகழும் சந்தோஷமான சடங்கென்றால் அது திருமணம் தான்.
அனைவரது வாழ்விலும் திருமணம் என்பது இன்றியமையாத சடங்காகும். திருமணம் மட்டுமன்றி அனைத்து சுப காரியத்திலும் அட்சதை தூவி ஆசீர்வதிப்பது வழக்கம்.
அட்சதை என்பது முக்கியமான பொருளாக கருதப்படுகிறது. அட்சதை போடுவதற்கு அரிசியை ஏன் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அட்சதை தூவுவது ஏன்?
-
திருமணத்தில் மலர் தூவி ஆசிர்வாதம் செய்வதை விட அட்சதை தூவி ஆசீர்வதிப்பது உயர்வான செயலாக கருதப்படுகிறது.
- முனை உடையாத பச்சரிசியை அட்சதை போடுவதற்கு பயன்படுத்துவது நல்லதாகும்.
- மஞ்சள், பசு நெய் மற்றும் அரிசி சேர்த்து கலந்து எடுக்கும் கலவை தான் அட்சதை என்று கூறுவார்கள்.
- வெள்ளை அரிசியில் மஞ்சளும் நெய்யும் கலந்தால் அதில் தேவதைகள் நிறைந்திருப்பதாக அர்த்தம்.
- அரிசி சந்திரனுக்குரிய தானியமாகும். மஞ்சள் குருவின் நிறமாகும். நெய் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. இதை ஒருவர் மீது தூவுவதன் மூலம் அவர்களுக்கு அனைத்து பலனும் கிடைப்பதாக கருதப்படுகிறது.
- ஆன்மின ரீதியில் அரிசியை உடலுக்கும் மஞ்சளை ஆன்மாவிற்கும் நெய்யை தெய்வத்திற்கும் ஒப்பிடுவது வழக்கம்.
- உடல் ஆன்மா மற்றும் சக்தியோடு திருமண தம்பதிகளை வாழ்த்துவதாக அர்த்தம். எனவே தான் திருமணத்தில் இது பயன்படுத்தப்படுகிறது.
- தாலிக் கட்டும் வேளையில் அட்சதை தூவினால் அங்கு காணப்படும் தீய சக்திகள் நீங்கும் எனவும் அர்த்தம் உள்ளது.
- அரிசியை கையில் தொட்டு ஒருவருக்கு வழங்கக் கூடாது என சாஸ்திரம் கூறுகிறது. அதுப்போலவே அட்சதையும் கைகளால் பகிர்ந்துக்கொள்ளக் கூடாது.
- அட்சதை என்பது செல்வம், வரம் மற்றும் வம்ச விருத்திக்கு அடையாளமாகவும் திகழ்கிறது.