டிசம்பர் 20, 2025 அன்று குரு பகவான் மற்றும் சுக்கிர பகவான் இருவரும் இணைந்து சம சப்தக ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். குறிப்பாக ஐந்து ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம்.

மேஷம்
புதிய யோசனைகள் மூலம் தொழிலில் பெரும் வெற்றியைப் பெறுவீர்கள். வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். உற்சாகமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். குடும்பத்தில் பதட்டங்கள் நீங்கும். இதுவரை நிலவி வந்த சண்டை, சச்சரவுகள் சரியாகும்.
சிம்மம்
குழந்தைகள் வழியாக சுப செய்திகளை கேட்பீர்கள். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். நிதி ஆதாயம் பெறுவதற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். பல வழிகளில் சிக்கி இருந்த பணம் கைக்கு வரும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

துலாம்
தொழிலதிபர்கள் நிதி நிலைமை மேம்படுவதை கண்கூடாகக் காண்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் இருந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். தொழிலில் இருந்த எதிரிகள், போட்டியாளர்கள் விலகுவதால் வருமானம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
சொத்துக்கள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்கள் சம்பள உயர்வுடன் புதிய பொறுப்புக்களையும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவு மேலும் வலுப்பெறும். நீதிமன்ற வழக்குகளில் சிக்கி இருப்பவர்கள், பிரச்சனைகளில் இருந்து முழுமையான விடுதலைப் பெறுவீர்கள்.
மீனம்
புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பணி மாறுதலுக்காக காத்திருப்பவர்கள், நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு விரைவில் நேர்மறையான செய்திகள் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு, நல்ல சம்பளம் கிடைக்கலாம்.