ஜோதிடம்: சந்தோஷமாக இருந்த தம்பதிகள் பிரிய முக்கிய காரணம் என்ன?

By Sakthi Raj Jul 14, 2026 10:21 AM GMT
Report

 ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒருவர் வாழ்க்கையில் முக்கியமான பிரதிபலிப்பை கொடுக்கிறது. அப்படியாக, ஒரு சில தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். ஆனால், திடீர் என்று பிரிந்து விடுவார்கள். இவர்களா பிரிந்து சென்றார்கள் என்பது போல் எல்லோருக்கும் ஒரு உணர்வை கொடுக்கும்.

அப்படியாக, ஜாதகத்தில் தம்பதிகள் பிரிந்து வாழ்வதற்கான காரணம் என்ன? அவர்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம்.

ஜோதிடத்தை பொருத்தவரை செவ்வாய் கணவனைக் குறிப்பவராகவும், சுக்கிரன் மனைவியை குறிக்கப்பவராகவும் இருக்கிறார்.

இந்த இரு கிரகங்களுடன் கேது நெருக்கமாக இருக்கின்ற பொழுது அவர்களை இடையே பிரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக ஏழாம் இடம் என்கின்ற களத்திர ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது அவர்களுடைய திருமண வாழ்க்கையில் சிக்கல்களை கொடுக்கிறது.

12 ராசிகளின் வாழ்வை மாற்றும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்.. உங்களுக்கான மந்திரம் என்ன?

12 ராசிகளின் வாழ்வை மாற்றும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்.. உங்களுக்கான மந்திரம் என்ன?

ஒரு சில கிரக இணைப்புகள் அவர்கள் கணவன் மனைவியாக தூரத்திலிருந்து வாழக்கூடிய அமைப்பை கொடுக்கிறது.

அதாவது வேலைக்காக கணவன் மனைவி பிரிந்து வாழக்கூடிய நிலையை பெறுகிறார்கள். இவ்வாறான அமைப்பு கொண்டவர்கள் பெண்கள் செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானின் வழிபாடு செய்வதும், துர்க்கை அம்மன் வழிபாடு செய்வதும் மிகச்சிறந்த பரிகாரமாக அமையும்.

ஆண்கள் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தேவியின் மனதார வழிபாடு செய்யும்பொழுது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கிறது.

அப்படியாக, மேலும் கணவன் மனைவி இடையே ஒற்றுமையாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US