கூட்டத்தில் இருந்தாலும் தனிமை உணர்கிறீர்களா? ஆன்மிகக் காரணம் என்ன தெரியுமா??
பொதுவாகவே, ஆன்மீக வலிமை கொண்ட பெரும்பாலான நபர்கள் கண்களுக்கு தெரியாத ஒரு மனச் சுமையை சுமந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தியானம் செய்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், உண்மையைத் தேடி செல்கிறார்கள், விழிப்புணர்வுடன் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
இருந்தாலும் அவர்கள் ஆன்மிக ரீதியாக வளர வளர அதிகப்படியான தனிமையை உணரத் தொடங்குகிறார்கள். அதாவது நண்பர்கள் விலகிச் செல்லலாம். இவர்கள் மற்றவர்களிடம் பேசக்கூடிய உரையாடல்கள் மேலோட்டமாக இருக்கலாம்.
சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கூட இவர்களுக்கு மன ரீதியாக ஒரு சோர்வையை உண்டுச் செய்கிறது. ஆனால், இந்த இடத்தில் தான் ஒரு உண்மையை புதைந்து கிடைக்கிறது. அது அவர்களுடைய தோல்வியோ குறையோ அல்ல.

மாறாக அவர்களுடைய உள்ளார்ந்த மனநிலை மற்றும் சிந்தனை முறையில் ஏற்படுகின்ற மாற்றத்தின் அறிகுறியாகவே இருக்கிறது. அதாவது அந்த நபர் ஒரு ஆழமான சிந்தனைக்குள் செல்கின்ற பொழுது அவர்களை சுற்றி இருக்க கூடிய நபர்களால் அதே அளவிற்கு அந்த மாற்றத்தை புரிந்து கொள்ள முடியாமல் போகக்கூடிய நிலை உருவாகிறது.
1. ஆன்மிக வளர்ச்சிக்கு ஏற்ப உறவுகளும் மாறுகின்றன:
ஒருவரிடத்தில் அவர்களுடைய சிந்தனையும் விழிப்புணர்வும் அதிகரிக்கின்ற பொழுது அவர்களுடைய பழைய நட்புகளிலும் உறவுகளிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம். முன்னதாக அவர்களுக்கு நெருக்கமாக இருந்த நபர்கள் இப்பொழுது அவர்களுக்கு பொருத்தமற்றவர்களாக இருக்கலாம்.
அவர்களுடன் பேசும் பொழுது முன்பு கிடைத்த அந்த மகிழ்ச்சி இப்பொழுது கிடைக்காமல் போகலாம். அதற்காக அந்த உறவுகள் தவறானது என்று அல்ல. ஒருவருடைய சிந்தனை மற்றும் வாழ்க்கை அணுகும் விதம் மாறும்பொழுது அவர்களுடைய விருப்பமும் மாறுகின்றன.
இவர்கள் மேலோட்டமான உரையாடல்களின் காட்டிலும் ஆழமான கருத்துக்களை புரிந்து கொள்வதிலும் உண்மையான அன்பையும் மனப்பூர்வமான உணர்வுகளையும் தேடத் துவங்குகிறார்கள்.

அதாவது, பெரும்பாலான நபர்கள் அதிகமான நண்பர்களையும் சமூக அங்கீகாரத்தையும் தேடி செல்கின்ற பொழுது ஆன்மீக வளர்ச்சியில் இருக்கக்கூடியவர்கள் வாழ்க்கையில் உண்மையான அர்த்தத்தையும் மன அமைதியையும் தேடுகிறார்கள். இதனால் சில நேரங்களில் தனிமை உருவாகிறது. ஆனால், தனிமை என்பது எப்பொழுதும் எதிர்மறையான ஒன்று அல்ல.
சில நேரங்களில் அதை நம்மை நாமே புரிந்து கொள்ள உதவக்கூடிய ஒரு வாய்ப்பாகவே மாறுகிறது. மேலும், ஆன்மீக வளர்ச்சி என்பது ஒரே நாளிலோ ஒரே மாதங்களிலோ வருவது அல்ல. அது படிப்படியாக வளரக்கூடியது.
அந்த நிலையில், முன்பு பழகியவர்கள் இப்பொழுது வேறு மாதிரியாக தோன்றினாலும் அவர்களிடம் கோபம் கொள்ளாமல் அவர்களை அவ்வாறே ஏற்றுக் கொள்வதே ஒரு சிறந்த மன நிலையாகும். அதுவே ஒரு உண்மையான ஆன்மீகத் தேடலுக்குள் நம்மை அழைத்துச் செல்லக்கூடிய பாதையாகும்.
நாம் ஆன்மீகத்தில் வளருகின்ற பொழுது ஒவ்வொரு நபர்களுடைய உண்மை முகங்களும், நம்மை நாமே அறியக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். ஆதலால், சில நேரங்களில் தனிமை உணர்வும் அதிகமாகலாம். ஆனால், அந்த தனிமை எப்பொழுதும் நம்மை பாதிக்க கூடியதாக இருப்பதில்லை ஞான பாதைக்குள் கூட்டி செல்லக்கூடியது இருக்கிறது.
Disclaimer:
இது பொதுவான விளக்கத்தின் உள்ள கருத்துக்கள். மருத்துவம் அல்லது நிதி ஆலோசனை அல்ல. உங்களின் தனிப்பட்ட முடிவுகளுக்கு சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |