ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்
ஜோதிடத்தில் பல நன்மை தீமைகள் இருக்கிறது. அப்படியாக ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் என்று சொல்லுவது உண்டு.
அப்படியாக செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு பொதுவாகவே திருமண வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் சந்திக்கக்கூடும் என்றும் சொல்வது உண்டு. அந்த வகையில் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதை பற்றி பார்ப்போம்.
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அவர்கள் செவ்வாய் தோஷம் இருப்பவர்களை மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு புரிதல் இருக்கிறது. அதாவது செவ்வாய் தோஷம் அல்லாத ஒரு நபரை அந்த ஜாதகர் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமைவதில்லை என்றும் சில கருத்துக்கள் உண்டு.

அந்த வகையில் உண்மையில் செவ்வாய் தோஷம் என்பது ஒருவருடைய ஜாதகத்தில் அவர்களுக்கு தீய பலன்களை மட்டும் தான் கொடுக்கிறதா என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாக, செவ்வாய் தோஷம் இருக்கக்கூடிய இந்த நபர்கள் ஆளுமை திறனின் மிகச்சிறப்பானவர்களாக விளங்குகிறார்கள்.
மேலும் இந்த செவ்வாய் தோஷமானது பத்து நபர்களில் ஆறு நபர்களுக்காவது இருப்பதையும் நாம் காணலாம். அதோடு செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்தால் அவர்கள் வாழ்க்கை மிக மோசமான நிலைக்கு சென்று விடுவதும் இல்லை என்பதையும் நாம் பார்க்க முடிகிறது.
கூடுதலாக செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் தோஷம் அல்லாதவர்களை திருமணம் செய்யும் பொழுது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏதேனும் குறைகள் கொண்டு பிறக்கும் என்றும் ஒரு மூடநம்பிக்கைகள் இருந்து வருகிறது. இதுவும் தவறான கருத்துகளாகும்.
மேலும் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் தோஷம் இருப்பவர்களையே திருமணம் செய்து கொண்டு போதிலும் அவர்கள் வாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக அமைந்துவிடவில்லை. ஆக செவ்வாய் தோஷத்தினால் மக்கள் இடையே இருக்கக்கூடிய மூடநம்பிக்கைகளை நாம் சற்று ஆலோசித்து பார்க்க வேண்டும்.

செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த நபர்கள் பல விஷயங்களில் துன்பப்படுவார்கள் என்ற பலன்கள் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. இங்கு ஒவ்வொருவரும் அவர்களுடைய கர்ம வினைகளை வாங்கிக் கொண்டு இந்த பிறவியை எடுத்து வாழ்ந்து வருகிறார்கள். அதனால் இவ்வாறான தோஷம் என்ற கணக்குகள் இருந்தால் அவர்கள் வாழ்க்கை மிக மோசமான நிலைக்கு தான் செல்ல வேண்டும் என்று இல்லை.
இறைவன் அருளால் எவருடைய வாழ்க்கையும் எந்த நிலைக்கு வேண்டுமானாலும் மாறலாம். ஆக, யாரேனும் உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் மனக்குழப்பங்களை முதலில் விட்டு விடுங்கள். நம் வாழ்க்கையில் கிரகங்கள் ஒரு பக்கம் வேலை செய்தாலும் நம்முடைய எண்ண ஓட்டங்களும் நம் வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்து இருக்கிறது.
ஆதலால் உங்களுடைய எண்ணம் ஆனது செவ்வாய் தோஷம் இருப்பதால் எனக்கு திருமண தாமதம் தான் இருக்கும் என்று நம்பிவிட்டால் நீங்கள் திருமணம் தாமதத்தை மட்டும்தான் சந்திப்பீர்கள். ஆக எந்த என்ன தோஷம் வேண்டுமானாலும் இருக்கட்டும் நம்முடைய எண்ணம் சரியானதாக இருக்க வாழ்க்கை வளமாக மாறிவிடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |