உப்பு, பால் கீழே சிந்தினால் அபசகுனமா? உடனே இந்த பரிகாரம் செய்யுங்கள்
இந்து மத சாஸ்திரப்படி நம்முடைய வீடுகளில் பயன்படுத்தக்கூடிய சில முக்கியமான பொருட்கள் மகாலட்சுமியுடன் தொடர்பு கொண்ட பொருளாக பார்க்கப்படுகிறது. அதனால் அந்த பொருட்களை நாம் எப்போதும் வீடுகளில் சுத்தமாகவும் சரியான முறையில் கையாள வேண்டும் என்பது அவசியமாகும்.
அந்த வகையில், மகாலட்சுமிக்கு மிகுந்த பொருளாக கருதக்கூடிய பால் மற்றும் உப்பு இவை இரண்டும் எவ்வளவு தான் சரியாக கையாள முயற்சி செய்தாலும் சமயங்களில் கைதவறி கீழே விழக்கூடிய ஒரு நிலை இருக்கிறது. இந்த இரண்டு பொருட்கள் மட்டும் கீழே விழுகின்ற பொழுது எப்படி கீழே விழுந்தது என்று தெரியாது, நாம் கவனமாக தான் இருந்திருப்போம்.
ஆனால் அந்த நேரத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடந்திருக்கும். இதனை சமயங்களில் அபசகுனம் என்றும் நமக்கு எதிர்காலத்தில் நடக்க இருக்கக்கூடிய எதிர்மறையான விஷயங்களின் முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

அப்படியாக உப்பு பால் கீழே தவறி விழுந்தால் அபசகுனமா? அவ்வாறு விழுகின்ற நேரத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கிய பரிகாரங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
சாஸ்திரங்களில் பால் லட்சுமி தேவியின் அடையாளமாகவும் சந்திர பகவானுக்கு தொடர்புடையதாகவும் உள்ளது. அதேபோல் உப்பு நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமானதாக மற்றும் பிரிக்க முடியாத ஒரு பொருளாகவும் சுக்கிர பகவானுடைய தொடர்பு கொண்ட அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியதாகவும் கருதப்படுகிறது.
இருப்பினும் இது வெறும் உணவுப் பொருட்களாக மட்டுமல்லாமல் கடவுளுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய பொருளாகவும் இருக்கிறது.
அதனால் வீடுகளில் பால் கீழே கொட்டுவது என்பது மிகவும் அபசகுனமானதாக கருதப்படுகிறது. பால் என்பது நேரடியாக சந்திர பகவானுடைய தொடர்புடையது என்பதால் இவ்வாறு பால் வீடுகளில் பொங்கி சிந்திய என்ற வேலையில் குடும்பத்தில் ஏதேனும் மனக்கசப்புகள், குழப்பங்கள் ஏற்படுவதின் அறிகுறியாக இருக்கிறது.
அதேபோல் மகாலட்சுமியின் பாற்கடலில் தோன்றியது உப்பு என்பதால் இந்த உப்பு கீழே சிந்துகின்ற வேளையில் பொருளாதாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பொருளாதார ரீதியாக சில பிரச்சனைகளை நாம் சந்திக்க கூடும் என்பதின் அறிகுறியாக கருதப்படுகிறது.

செய்ய வேண்டியவை:
இவ்வாறு பால் மற்றும் உப்பு கீழே சிந்தி விட்டால் அதை ஒருபோதும் துடைக்காமல் அல்லது நேரடியாக கைகளால் எடுக்காமல் வாஸ்து சாஸ்திரத்தின் படி சிந்திய உப்பின் மீது சிறிது தண்ணீரை ஊற்றி அதை கரைத்து விடுங்கள்.
பின்னர் ஒரு துணியால் சுத்தம் செய்யுங்கள். அதைப்போல் பால் தற்செயலாக கீழே கொட்டி விட்டாலும் அந்த இடங்களை உடனடியாக சுத்தம் செய்து விடுங்கள். பிறகு அந்த இடத்தில் வீடுகளில் புனித தீர்த்தங்கள் இருந்தால் அதை தெளித்து கழுவி விடுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது வீடுகளில் ஒரு அமைதி நிலையை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |