ஜாதகத்தில் இந்த கிரகம் பலவீனமாக உள்ளதா? உடனடியாக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்
ஒவ்வொருவர் ஜாதகத்திலும் ஒரு சில கிரகங்கள் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கும். அவர்கள் அந்த கிரகத்திற்கு பலத்தை அளிக்கும் விதமாக ஒரு சில பரிகாரங்களை மேற்கொள்கின்ற பொழுது அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும். அதைப்பற்றி பார்ப்போம்.
சூரியன்:
சூரியன் பலவீனமாக இருக்கிறார் என்றால் அவர்கள் செவ்வந்திப் பூ படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது அவர்களுக்கு உடல் ஆரோக்கியம், அரசு சார்ந்த விஷயங்களில் ஆதரவு, புகழ், செல்வாக்கு உண்டாகும்.
சந்திரன்:
சந்திரன் பலவீனமாக இருந்தால் இவர்கள் வெள்ளை அரளிப்பூ சமர்ப்பித்து வழிபாடு செய்யும்பொழுது மன அமைதி, தெளிவ, தாயின் உடைய அருள் கிடைக்கும்.
செவ்வாய்:
செம்பருத்திப்பூ படைத்து வழிபாடு செய்யும்பொழுது எதையும் தைரியமாக முடிவெடுக்கக்கூடிய தன்மை, நிலம், சொத்து வெற்றி, கடன் ஆகியவை கிடைக்கும்.
புதன்:
துளசி இலை இவர்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்யும் பொழுது கல்வியில் சிறந்து விளங்குவார்கள், புத்தியில் சிறந்து விளங்க கூடிய தன்மை உருவாகும், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும்.
குரு:
இவர்கள் மல்லிகை சமர்ப்பித்து வழிபாடு செய்யும்பொழுது கல்வி குழந்தை பாக்கியம் தெய்வத்தின் செல்வம் மங்களகரமான பலன்களை பெறுகிறார்கள்.

சுக்கிரன்:
இவர்கள் வெள்ளை ரோஜா பூ சமர்ப்பித்து வழிபாடு செய்யும் பொழுது அன்பு, அழகு இன்பம் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனை விலகுதல், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
சனிபகவான்:
நீல லில்லி பூவை சமர்ப்பித்து வழிபாடு செய்யும்பொழுது சனி தோஷம் நிவாரணம் பெரும், பொறுமை கிடைக்கும், தொழிலில் வளர்ச்சி, கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
ராகு:
நீல அப்பராஜித பூவை சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது திடீரென்று வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் விலகும், வெளிநாடு தொடர்பான விஷயங்கள் கைகூடி வரும்.
கேது:
வெள்ளை செம்பருத்தி வழிபாடு செய்யும் பொழுது மோட்சம் ஆன்மீகத்தை முன்னேற்றம் பித்ரு தோஷ நிவாரணம் ஞானம் பெருகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |