மேஷம் முதல் கடகம் வரை.. வழிபாடு செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த பரிகார ஆலயங்கள்
மேஷம் முதல் கடகம் வரை இருக்கக்கூடிய ராசிகளுக்கு எந்த ஆலயம் அவர்களுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
1. மேஷம்:
வரதராஜப் பெருமாள் கோயில்:
இவர்களுக்கு காஞ்சிபுரத்தில் அமைந்து இருக்க கூடிய வரதராஜ பெருமாள் திருக்கோவில் மிகவும் உகந்த தலமாக இருக்கிறது. இங்கு சென்று வழிபாடு செய்ய இவர்களுக்கு மன உறுதியுடன், நம்பிக்கையும் எதிர்கால வாழ்க்கை சிறப்பாகவும் அமைகிறது.

2. ரிஷபம்:
சாரங்கபாணி கோயில்:
கும்பகோணத்தில் அமைந்திருக்க கூடிய சாரங்கபாணி பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த ராசியினர் இங்கு சென்று வழிபாடு செய்ய இவர்களுக்கு குடும்ப நலன் மற்றும் குடும்பத்தில் பிரச்சனை இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கிறது.
3. மிதுனம் :
சக்கரபாணி கோயில்:
கும்பகோணத்தில் அமைந்திருக்கக்கூடிய சக்கரபாணி திருக்கோயில் திருமாலின் சக்கரத்தாழ்வார் வடிவத்துடன் தொடர்புடைய மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இங்கு சென்று மிதுன ராசியினர் மனம் உருக வழிபாடு செய்ய ஒரு தெளிவான சிந்தனையும், மன அமைதியும், குழப்பமும் விலகி நம்பிக்கையுடன் செயல்பட வழிவகுக்கும்.

4. கடகம்:
காளஹஸ்தீஸ்வரர் கோயில்:
கடக ராசியினருக்கு ஆந்திர பிரதேசத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீ காலஹஸ்தி திருக்கோயில் மிகவும் உகந்த திருக்கோயிலாக இருக்கிறது. வாயு தலமாக போற்றக்கூடிய இந்த ஆலயத்திற்கு சென்று ராகு கேது வழிபாடு செய்கின்ற பொழுது மன கவலைகள் விலகி நல்வழி பிறக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |