தங்கம் யார் எல்லாம் அணியலாம்?அணியக்கூடாது?
தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.கண்டிப்பாக ஒரு ம்னிதன் வாழ்க்கையில் தான் அணியும் ஆபரணம் முழுவதும் தங்கத்தில் அணியவேண்டும் அதே போல் நிறைய சம்பாதித்து தங்கம் வாங்கி சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வைத்திருப்பார்கள்.
மேலும் தங்கம் ஒரு மிக சிறந்த சேமிப்பு என்றே சொல்லலாம்.அவ்வளவு சிறப்பு வாய்ந்த தங்கத்தை எப்படி அணிந்தால் நல்ல பலனை பெறலாம்? தங்கம் அணிவதற்கு இருக்கும் விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஒரு பொருளை அணிவதற்கும் ஒரு காரியம் செய்வதற்கும் சரியான நேரம் காலம் இருக்கிறது.அதே போல் தங்கம் வாங்கி அதற்கான உரிய காலத்தில் அணிந்தால் மட்டுமே நாம் சரியான பலனை பெற முடியும். மேலும் தங்கம் ஆன்மிக பார்வையில் சக்தி, செழிப்பு, அமைதி, மங்களம் மற்றும் தூய்மை ஆகியவற்றை குறிக்கிறது.
மேலும் ஜோதிடத்தின் படி, தங்கம் சூரியனின் பிரதிநிதியாகவும், மிகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. ராகு மற்றும் கேதுவின் தாக்கங்களைத் தடுக்க தங்கம் பெரிதும் உதவுகிறது என்றும் நம்பப்படுகிறது.
யார் தங்கம் அணிந்தாலும் அவர்கள் மிக அழகாக காணப்படுவார்.அதே போல் ஒருவர் தங்கம் அணிவதால் அவருக்கு வியாழ பகவானின் அருள் கிடைக்கும்.அதனால் வியாழக்கிழமைகளில் தங்கம் அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. சனி, புதன், வெள்ளிக் கிழமைகளில் இதை அணிவதும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
ராகு மற்றும் கேதுவின் தாக்கம் அதிகம் உள்ளவர்களும், சூரியன் அல்லது புதன் போன்ற கிரகங்களின் தாக்கம் உள்ளவர்களும் தங்கத்தை அணிவதன் மூலம் அந்த கிரகங்களின் தாக்கம் குறைந்து நல்ல பலனை பெறலாம்
ஜோதிட சாஸ்திரப்படி மேஷம், கடகம், சிம்மம், மிதுனம், தனுசு போன்ற ராசிகளை சேர்ந்தவர்கள் தங்கம் அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மற்ற ராசியினர் ஜாதகத்தில் வியாழன் இருக்கும் நிலையைப் பார்த்த பிறகே தங்கம் அணிய வேண்டும்.
அதே போல் வயிறு, உடல் பருமன் தொடர்பான பிரச்னைகள், தூக்கமின்மை உள்ளவர்கள் தங்கம் அணிவதை குறைத்து கொள்ளவது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |