சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி உண்டா? ஏப்ரல் 7 ஆம் தேதி என்ன நடக்கும்?
சபரிமலையில் ஐயப்பன் கோவிலுக்கு எல்லா வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கலாம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான சீராய்வு மனுக்களை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதாவது, சபரிமலை ஐயப்பன் கோவில் எல்லா வயது பெண்களும் அனுமதிக்கப்படலாம் என ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவுவிட்டது. இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது 2019 அமைக்கப்பட்ட ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிப்பு வந்தது.

அப்பொழுது கொரோனா தொற்று காரணமாக முழு விசாரணை நடத்தப்பட முடியவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி சூரியகாந்த தலைமையில் அமர்வு முன்பு திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மறுபரிசீலனை செய்த மனுக்களை அவர் ஆதரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதாவது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் நுழைய எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2026 ஆம் ஆண்டு வருகின்ற ஏப்ரல் 7ம் ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருக்கிறது.
ஏப்ரல் 7 முதல் 9 வரை சீராய்வு மனு தாக்கல் செய்தவர்கள் தங்கள் வாதங்களை முன் வைக்க வேண்டும் என்றும், சீராய்வு மனுவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் வாதங்கள் ஏப்ரல் 14 முதல் 16 வரை கேட்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதற்கு மறு வாதங்கள் ஏதேனும் இருந்தால் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று விசாரணை செய்யப்படும் என்றும் அதை தொடர்ந்து நீதிமன்றம் நியமித்த நிபுணரின் கருத்துக்களும் இறுதி ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து பலரும் விசாரணையின் முடிவு என்னவாக இருக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |