சபரிமலை இருமுடியில் கட்டாயம் வைக்க வேண்டிய 18 பொருட்கள் என்னென்ன தெரியுமா?

By Sakthi Raj Nov 28, 2026 12:45 PM GMT
Report

சபரிமலை யாத்திரையில் மிகவும் முக்கியமானதாக இருமுடி கட்டுவது இருக்கிறது. இரண்டு பகுதிகளாக கட்டக்கூடிய இந்த இரு முடியில் ஒரு பகுதி சுவாமி ஐயப்பனுக்கு செலுத்துவதற்காக எடுத்துச் செல்லக்கூடிய பூஜை பொருட்களும், மற்றொரு பகுதியில் பக்தர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் ஆகியவை வைத்து கட்டப்பட்டிருக்கும்.

இதில் சுவாமி ஐயப்பனுக்கு காணிக்கையாக செலுத்துவதற்காக எடுத்துச் செல்லக்கூடிய பொருட்கள் மிகவும் முக்கியமானவையாக இருக்கிறது. இதில் என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்ற பாரம்பரிய முறை பலருக்கும் தெரிவதில்லை.

பெரும்பாலான நபர்கள் பச்ச அரிசி, நெய், தேங்காய் ஆகிவற்றை மட்டுமே கட்டி எடுத்து செல்கிறார்கள். ஆனால், பாரம்பரிய முறைப்படி மொத்தம் 18 பொருட்கள் ஸ்வாமி ஐயப்பனுக்கு காணிக்கையாக இருமுடியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது நம்பிக்கையாக பின்பற்றப்பட்டிருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

சபரிமலை இருமுடியில் கட்டாயம் வைக்க வேண்டிய 18 பொருட்கள் என்னென்ன தெரியுமா? | Sabarimala Irumudi 18 Items And Its Significance

இருமுடியில் வைக்க வேண்டிய 18 பொருட்களும் சிறப்புகளும் :

1. நெய் தேங்காய்

நெய் ஜீவாத்மாவை குறிக்கக் கூடியதாக இருக்கிறது. ஐயப்பன் பரமாத்மாவுடன் இணைவதை குறிக்கக்கூடிய ஒரு முக்கியமான பொருளாக இருக்கிறது.

2. பச்சரிசி

வாழ்க்கையில் வறுமையின்றி உணவும் செல்வமும் பெருக வைக்கும்.

3. வெற்றிலை

நமக்கு மங்களகரமான தொடக்கத்தையும் வெற்றியையும் குறிக்கக் கூடியதாக இருக்கிறது.

4. பாக்கு 

உறுதியான பக்தியையும் மனவலிமையையும் குறிக்கிறது.

5. கற்பூரம்

தான் என்கின்ற "ஆணவம்" விலகி இறைவனுடன் ஒளியாக கலப்பதை உணர்த்துகிறது.

6. மஞ்சள் பொடி 

மங்களம் ஆரோக்கியம் நோயில்லாத வாழ்க்கையை அருளக்கூடிய மங்களமான பொருள்

7. குங்குமம்

சக்தியின் வடிவமாகவும் குடும்ப நலன் மற்றும் சௌபாக்கியத்திற்காகவும் வைக்கப்படுகிறது.

8. ஊதுபத்தி

ஊதுபத்தி நறுமணம் போல் நம்முடைய நற்செயல்கள் எங்கும் பரவ வேண்டும் என்பதை இதை குறிக்கிறது.

சபரிமலை இருமுடியில் கட்டாயம் வைக்க வேண்டிய 18 பொருட்கள் என்னென்ன தெரியுமா? | Sabarimala Irumudi 18 Items And Its Significance

நீண்டகாலமாக வழக்கு பிரச்சனைகளைச் சந்திக்கிறீர்களா? செய்யவேண்டிய சக்தி வாய்ந்த வழிபாடு

நீண்டகாலமாக வழக்கு பிரச்சனைகளைச் சந்திக்கிறீர்களா? செய்யவேண்டிய சக்தி வாய்ந்த வழிபாடு

9. சந்தனம்

மனதிற்கு குளிர்ச்சியையும் அமைதியையும் தரக்கூடியதாக இருக்கிறது.

10. விபூதி

நிலையில்லாத உலக வாழ்க்கையை உணர்த்தி பாவங்களை போக்கி தூய்மைப்படுத்துவதை குறிக்கிறது

11. பன்னீர்

இறைவனின் அபிஷேகத்திற்கும் மனம் தூய்மைப்பும் உரியது.

12. தேன் 

ஒரு மனிதனின் இனிய பேச்சையும் வாழ்வில் மகிழ்ச்சியையும் அருளக்கூடியது.

13. கற்கண்டு/ வெல்லம்

இறைவனுக்கு நெய்வேத்தியமாக படைக்கக்கூடிய கற்கண்டு அல்லது வெல்லம் வாழ்க்கையில் இனிமையை சேர்க்கும்.

14. அவல்/ பொரி

எளிமையான பக்திக்கும் வாழ்க்கையில் தரித்திரம் நீங்குவதற்கும் உரியது.

15. உலர் திராட்சை மற்றும் முந்திரி

ஒருவரின் வளமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை குறிக்கக் கூடியது.

16. ஏலக்காய் மற்றும் கிராம்பு

நறுமணத்தையும் நேர்மறை ஆற்றலையும் குறிக்கக் கூடியதாக உள்ளது.

17. காணிக்கை

இறைவனுக்கு செலுத்தக்கூடிய நன்றி கடனாகவும் தர்ம சிந்தனையின் அடையாளமாகவும் வைக்கப்படுகிறது.

18. சாதாரண தேங்காய் (உடைப்பதற்கு)

பயணத்தின் பொழுது வெளியே தடைகள் நீக்க பயன்படுத்தப்படுகிறது.

மேலும், சபரிமலையில் இருக்கக்கூடிய படிக்கட்டுகளின் எண்ணிக்கை மட்டுமல்ல ஐயப்பனுக்கு படைக்கக்கூடிய பொருட்களும் 18 தான். அதேபோல், சபரிமலை தொடர்பான பெரும்பாலான விஷயங்கள் 8 என்கின்ற எண்ணுடனே தொடர்புடையதாக இருக்கிறது.

விரதம் என்று எடுத்துக் கொள்கின்ற பொழுதும் 48 நாட்கள் அல்லது 18 நாட்கள் விரதம் என்றும், மாலை அணியும் பக்தர்கள் மணிகளின் எண்ணிக்கை 108 அல்லது 48 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் இருக்கிறது.

அதாவது 8 என்ற எண் மட்டுமே தொடக்கமும் முடிவும் இல்லாதது என்பதை குறிக்க கூடியதாக இருக்கிறது. இறைவனும் ஆரம்பமும் முடிவும் இல்லாதவர் என்பதை உணர்த்துவதற்காகவே எட்டு என்ற எண்ணுடன் தொடர்புடையதாகவும் அமைக்கப்பட்டுள்ளன.  

Disclaimer:

இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US