சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிய நல்ல நேரம்

By Sakthi Raj Nov 16, 2024 08:23 AM GMT
Report

கார்த்திகை மாதம் பிறந்து விட்டது.கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு மாலை அணிய உகந்த மாதம் ஆகும்.கார்த்திகை முதல் நாள் அன்றே பல லட்ச பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிய தொடங்குவார்கள்.

அப்படியாக நாம் இப்பொழுது ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிய உகந்த நேரம் எந்த முறையில் மாலை அணிய வேண்டும் என்று பார்ப்போம்.

இந்த வருடம் சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 15ம் தேதியான நேற்று, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது. நவம்பர் 16ம் தேதி, அதாவது கார்த்திகை முதல் தேதியான இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிய நல்ல நேரம் | Sabarimalai Maalai Aniya Nalla Neram

இந்த நிலையில் பல லட்ச பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிய ஆவலுடன் காத்திருக்கின்றனர்.அப்படியாக மாலை அணிய விரும்புவர்கள் குருசாமி கையால் துளசி மணிமாலை அணிந்து தான் ஐயப்ப விரதத்தை துவக்க வேண்டும் என்பது வரைமுறை.

சனியின் அருளால் இனிமேல் இவங்களுக்கு நல்ல காலம் தான்

சனியின் அருளால் இனிமேல் இவங்களுக்கு நல்ல காலம் தான்

 

முதல் முறையாக சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் கருப்பு உடை அணிந்தும், பல வருடங்களாக சபரிமலை சென்றவர்கள் காவி, நீலம் நிறங்களில் உடை அணிந்தும் விரதம் இருக்க வேண்டும். சபரிமலைக்கு மாலை அணிய விரும்பும் பக்தர்கள் பெரிதாக நல்ல நேரம் எதுவும் பார்க்க தேவை இல்லை.

அதாவது இந்த ஆண்டு முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரம் அன்றே கார்த்திகை முதல் நாள் துவங்குவதால் மாலை அணிவதற்கு நல்ல நேரம் பார்க்க வேண்டியதில்லை.ஆனால் ஒரு குருசாமியிடம் நல்ல ஆலோசனை பெற்ற பிறகு மாலை அணிவது சிறந்ததாகும்.

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிய நல்ல நேரம் | Sabarimalai Maalai Aniya Nalla Neram

மேலும் மாலை அணியும் பொழுது உறுதியான கம்பியில் செய்யப்பட்ட துளசி மணி மாலையை வாங்கி, ஐயப்பனின் திருவடிகளில் வைத்து பூஜை செய்து வழிபட்ட பிறகே மாலையை அணிந்து கொள்ள வேண்டும். ஒரு மாலை அணிந்தாலே போதுமானதாகும்.

துணை மாலை அணிய வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. மாலை அணியும் பொழுது அவர் அவர் குலதெய்வத்தை மனதார நினைத்தும் ஐயப்பனை வழிபட்டும் மாலை அணிந்து கொள்ளவது அவசியம்.மேலும் மாலை அணியும் பொழுது குருசாமி முன்பு மண்டியிட்டு, மாலை அணிந்து கொள்ள வேண்டும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US