சபரிமலை செல்பவர்கள் மறந்தும் இந்த பொருட்களை எடுத்து செல்லாதீர்கள்
கார்த்திகை மாதம் மிகவும் விஷேசமான மாதம் ஆகும்.இந்த மாதத்தில் தான் திருக்கார்த்திகை மற்றும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரி மலைக்கு செல்வார்கள்.அப்படியாக சபரி மலைக்கு செல்பவர்கள் மறந்தும் ஒரு சில பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.அதை பற்றி பார்ப்போம்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, இன்று நடை திறக்கப்படுகிறது. சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை, டிசம்பர் 26 ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் எப்பொழுதும் அதிக அளவில் வருவார்கள்.
அதனால் சபரிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில்,ஒவ்வொரு ஆண்டும் சபரி மலைக்கு பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.
அப்படியாக இருமுடி கட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தங்களது இருமுடி கட்டுகளில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் மற்றும் நெகிழிப் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அதே போல் பக்தர்கள் அணிந்து செல்லும் ஆடைகள், மாலைகள் உள்ளிட்டவற்றை பம்பை ஆற்றில் போட்டு செல்லவும் தடை விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டுக்கான சுற்றறிக்கை விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே சபரிமலையில் நடத்தப்படும் புஷ்பாபிஷேகத்திற்கு அதிகளவில் மலர்களை கொண்டு வரக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதலால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனமாக கட்டுப்பாட்டுக்கு உள்ள பொருட்களை மற்றும் எடுத்து சென்று சுற்றுசுழலுக்கு நம்முடைய பங்கையும் கொடுத்து வழிபட்டு வருவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |