2026 ராகு கேது பெயர்ச்சி: தனுசு ராசியினர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?
2026 ஆம் ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ராகு கேது பெயர்ச்சி டிசம்பர் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. இதில் ராகு பகவான் கும்பத்திலிருந்து மகரத்திற்கும், கேது பகவான் சிம்மத்தில் இருந்து கடகத்திற்கும் பயணம் செய்ய இருக்கிறார்கள்.
இந்த பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றங்களை வாழ்க்கையில் கொடுக்கப் போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு இரண்டாம் இடத்தில் ராகுவும், எட்டாம் இடத்தில் கேதுவும் வரக்கூடிய பெயர்ச்சியாகும்.

இதனால் இவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் விலகி சந்தோஷம் அதிகரிக்க கூடிய அற்புதமான காலகட்டம். அதே சமயம், எதிலும் இவர்கள் நிதானமாகவும் நேர்மையாகவும் செயல்படுவது அவசியமாக இருக்கிறது.
வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய திறமை வெளிப்படும். இருப்பினும் பிறர் விஷயங்களில் தலையிடும் பொழுது மட்டும் சற்று கவனமாக இருப்பது அவசியம்.
இந்த காலகட்டங்களில் மற்ற ஒருவருக்கு ஆலோசனையை சொல்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
இதனால் உங்களுக்கு அவப்பெயர் வர வாய்ப்புகள் இருக்கிறது. தன்னம்பிக்கையோடு செயல்படுவதும், நீங்களும் உங்களுடைய வேலையும் என்று இருப்பது உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.

வேலை மாற்றம் வந்தால் நிச்சயமாக அதை ஏற்றுக் கொள்ளலாம். இந்த காலகட்டங்களில் ஒரு சிலருக்கு வேலை சார்ந்த அலைச்சல் வரலாம்.
எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அமைதி காப்பது அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். உறவுகள் இடையே பகையை மறந்து விட்டுக் கொடுத்து சென்றால் நன்மை உருவாகும். வீடுகளில் திருமண பேச்சு, குழந்தை பாக்கியம் நீங்கள் நினைத்தது போல் கிடைக்கும்.
வாழ்க்கை துணையின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள். பெண்களாக இருந்தால் ஹார்மோன் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடு செல்ல வேண்டிய வாய்ப்புகள் வந்தால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்வது நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |