பலரும் அறிந்திடாத சக்தி வாய்ந்த பைரவர் வழிபாடு
நினைத்ததை சாதிக்க அனைவரும் பற்றி கொள்ள வேண்டிய தெய்வம் என்றால் அது பைரவர் தான்.அதாவது பலருக்கும் பைரவரின் வழிபாடு பற்றி தெரிவதில்லை.பைரவர் போல் ஒரு மனிதனுக்கு மன தைரியமும் நினைத்ததை அடைய செய்யும் ஆற்றலும் கொடுக்க எவராலும் முடியாது.ஏன்?பைரவரை வெற்றி கடவுள் என்றே சொல்லலாம்.
எவர் ஒருவர் பைரவர் மந்திரங்களை இடைவிடாது உச்சரித்தும் கேட்டுக்கொண்டும் வருகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பைரவர் அருளால் பல நன்மைகள் நடைபெறும். உதாரணமாக உங்கள் வியாபாரத்தில் சில வீழ்ச்சிகள்,அல்லது படிப்பில் தடங்கல்,கனவு நினைவாக தாமதம் என்றால் பைரவர் பற்றி கொள்வது உங்களுக்கு சிறந்த துணையாக அமையும்.
பைரவர் ஒரு மனிதனுக்கு அதீத தைரியமும் எதையும் சாதிக்கும் நம்பிக்கையையும் கொடுக்கிறார்.அதோடு ஆலயம் சென்று பைரவர் வழிபாடு செய்தால் நம்முடைய தோஷங்கள் எல்லாம் படிப்படியாக குறைந்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பைரவர் வழிபாட்டை சொல்லிக்கொடுக்க வேண்டும்.அது அவர்களுக்கு பல விதத்தில் மனதில் நம்பிக்கையை விதைக்கிறது.அதோடு அவர்களுக்கு பைரவர் ஒரு பக்க பலமாக இருப்பார்.
ஆக உங்களுக்கு ஒரு காரியம் நடக்கவேண்டுமா?அந்த காரியத்தை மனதில் நினைத்து கொண்டு நாம் பைரவர் மந்திரங்கள் சொல்லி வர நிச்சயம் அந்த காரியம் நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |