ஒரே வீட்டில் ஒரே ராசியினர் இருந்தால் என்ன பரிகாரம்
ஒரே வீட்டில் ஒரே ராசிக்காரர்கள் இருவர் அல்லது மூன்று பேர் இருந்தால் என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்படும்?
குடும்பத்தில் பிரச்சனை வந்து கொண்டே இருப்பதால் என்ன பரிகாரம் செய்யலாம்? என்ற கேள்வியும் இருந்து கொண்டே இருக்கும்.
அப்பாவின் ராசி நட்சத்திரத்தில் குழந்தை பிறப்பதும், கணவன்- மனைவி ஒரே ராசியாக இருப்பதும் குடும்பத்தில் நிம்மதியை கெடுக்கலாம்.
திருமணம் செய்வதற்கு முன்பே இருவரின் ஜாதகத்தை பார்த்தே முடிவெடுப்பார்கள், ஒரே ராசி என்றால் திருமணம் செய்வதற்கு கூட பெரியவர்கள் யோசிப்பார்கள்.
ஒருவேளை காதல் திருமணமாக இருக்கும்பட்சத்தில் ஒன்றும் செய்ய முடியாது, இதற்கு பரிகாரத்தை செய்வதன் மூலம் பிரச்சனைகள் குறையலாம்.
குழந்தைகள்- அப்பா என ஒரே ராசியில் இருந்தால் இறைவனுக்கு தத்துக்கொடுத்துவிட்டு திரும்ப பெற்றுக்கொள்ளும் வழக்கமும் இருக்கிறது.
ஒரே ராசியில் இருக்கும் போது ஒருவர் வளமாகவும், மற்றொருவர் கஷ்டப்படும் சூழலும் வரலாம்.
ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடக்கும் போது ஒரே ராசிக்காரர்கள் இருந்தால் பிரச்சனை தீவிரமாகும்.
எப்போதும் சண்டை, சச்சரவு, தேவையற்ற வாக்குவாதங்கள், விபத்து கூட நேரிடும், அந்நேரங்களில் பிரிந்து இருப்பது நல்லது.
உறவினர் வீட்டிலோ, தங்கும் விடுதியிலோ ஒருவர் இருக்கலாம்.
இதற்கு பரிகாரமாக குருவாயூர் கோயிலில் துலாபாரம் கொடுக்கலாம், எடைக்கு எடை வாழைப்பழம், பேரிச்சம் பழம் மற்றும் வெல்லம் கொடுக்கலாம்.
கடற்கரைக்கு அருகே உள்ள கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும், வருடத்திற்கு ஒருமுறையாவது திருச்செந்தூர் முருகனை தரிசிப்பது நல்லது.
பிரதிவாரம் சனிக்கிழமைகளில் நவக்கிரகத்திற்கு எள் விளக்கிட்டு 27 முறை சுற்றி வருவதால் கிரகங்களின் தாக்கம் குறையும்.