சேலம் கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் விழா
சங்காபிஷேகம் என்பது கார்த்திகை மாதத்தில் சிவபெருமானை குளிர்விக்கும் ஒரு சிறப்பு பூஜையாகும்.
புனித நீரால் நிரப்பப்பட்ட வலம்புரி சங்குகளை கங்கையாகக் கருதி சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதே சங்காபிஷேகமாகும்.
இந்நிலையில், கார்த்திகை சோமவாரத்தின் சிறப்பை முன்னிட்டு, தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

மாலை 4 மணியளவில் துவங்கிய அபிஷேகத்தில், முதலில் யாகசாலை அமைத்து ஹோமம் செய்யப்பட்டது.
பின் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி இரவு 7 மணி வரை சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சிவன் அருளைப் பெற்றுச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியை காண்பதால் கஷ்டங்கள் நீங்கி, உலக வெப்பம் தணிந்து, தேவையான மழை பொழியும் என்பது நம்பிக்கை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |