அனைவரும் கட்டாயம் செல்ல வேண்டிய சனிபகவானின் பரிகார தலங்கள்
சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்ற பழமொழி உண்டு. அது நல்லது தீயது என்று இரண்டிற்கும் பொருந்தும். அதனால் தான் சனி பகவான் என்றால் எல்லாருக்கும் ஒருவிதமான பயம் உண்டாகிறது. ஆந்த வகையில் சனி பகவானின் தாக்கம் குறைய நாம் செல்ல வேண்டிய பரிகார தலங்கள் பற்றி பார்ப்போம்.
திருநள்ளாறு:
திருநள்ளாறு சனி பகவான் திருக்கோயில் புதுச்சேரி அருகே உள்ள காரைக்கால் யூனியன் பிரதேசத்தில் அமைந்து உள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில் சுமார் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாகும்.
இந்த கோயிலுக்கு சென்று சனி பகவானை வழிபாடு செய்யும் முன் பக்தர்கள் முதலில் நள தீர்த்தம் என்னும் புனித தீர்த்தத்தில் நீராடிய பிறகே சனி பகவானை தரிசனம் செய்ய செல்ல வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது தான் அவர்களின் தோஷம் விலகுகிறது என்று சொல்லப்படுகிறது.
மேலும், குளிப்பதில் சில முக்கிய விஷயங்களை பின்பற்ற வேண்டும். அதாவது நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு வடக்கு முகமாகவோ, அல்லது கிழக்கு முகமாகவோ 9 முறை ஸ்நானம் செய்து தலை குளிக்க வேண்டும். அதன்பின்பு பிரம்மதீர்த்தம், சரஸ்வதி குளத்திலும் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
அதனை தொடர்ந்து கோவிலுக்குள் நுழைந்து வலமாக வந்து சொர்ண கணபதியை முதலில் வழிபட்டு சுப்பிரமணியர் சன்னதியை தரிசனம் செய்து கொண்டு கர்ப்ப கிரகத்தில் தர்ப்பாரண்யேஸ்வரர் எனும் திரு நாமம் கொண்டு எழுந் தருளியள்ள சிவ பெருமானை வழிபட வேண்டும்.
அதன் பின் அவரை தரிசித்து வலம் வரும் போது கட்டை கோபுரச்சுவரில் சிறிய மாடத்தினுள் எழுந்தருளியுள்ள சனிபகவானை தரிசிக்கலாம். இந்த சனி பகவானை தரிசனம் செய்யத்தான் மக்கள் பலரும் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தருகின்றனர். இந்த தலத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் அரிசொல் நதிக்கும், வாஞ்சை நதிக்கும் இடையில் அமைந்திருப்பது தான்.
இத்திருத்தலத்தில் திருமால், பிரம்மன், இந்திரன், தசை பாலர்கள், அகத்தியர், புலங்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்ட சிறப்பு வாய்ந்த தலம் ஆகும். இந்த கோயிலில் முன்புறம் சனி வீடான மகர, கும்ப ராசிகளின் உருவங்கள் உள்ளன. சனி தோஷம் இருப்பவர்கள் எள் முடிச்சு தீபம் போடும் பிராத்தனை விஷேசம் வாய்ந்தது.
குச்சனூர்:
சனி பகவானின் அடுத்த முக்கிய தலமாக இந்த குச்சனூர் சனிபகவான் திகழ்கிறார். அதாவது திருநள்ளார் சனீஸ்வர பகவானுக்கு சாப விமோசனம் அளித்தவர் குச்சனூர் சனிபகவான் என்ற விஷேசம் கொண்ட திருத்தலம் ஆகும்.
இந்தியாவிலேயே சனீஸ்வரருக்கு என்று கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்று சிறப்புகளையும் கொண்டு தலம் என்ற புகழ் பெற்றது. இங்கு சனிபகவான் சுயம்புவாக உள்ளது கூடுதல் விசேஷம். அட்டமத்துச் சனி, கண்டசனி, அர்த்தாஷ்டம சனி பிடித்தவர்கள் குச்சனூர் சென்று சுயம்பு சனி பகவானை வழிபட சனி பகவானின் தாக்கம் குறைந்து மன அமைதி பெறுகிறார்கள்.
அதோடு இவரை வழிபாடு செய்ய தீராத வயிற்று வலி பிரச்சனையும் நல்ல தீர்வு பெரும். அதிலும் மிக முக்கியமாக ஒருவருக்கு உண்டான் திருமண தடை, கால தாமதம் ஆகும் குழந்தை பாக்கியம், தொழில் பிரச்சனைகள் இவைகளில் இருக்கும் தடைகள் விலகும்.
திருகொல்லிக்காடு :
ஒரு மனிதனுக்கு கட்டாயமாக 30 வயதில் இருந்து 60 வயதிற்குள் மங்கு சனியால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு பொங்குச்சனி கண்டிப்பாக வரும். அப்படி பாதிக்க பட்டவர்களுக்கான பரிகார தலம் தான் இந்த திருகொல்லிக்காடு தலம் ஆகும். இங்கு சென்று நிச்சயம் நல்ல மாற்றம் காணலாம் என்று சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |