உக்கிரமாக காட்சியளிக்கும் சனிபகவான் .. இந்த சனியை பார்த்தால் துன்பங்கள் குறையும்
சனி பகவான் என்றாலே பயம் தான் ஏற்படும்.பொதுவாக சனி பெயர்ச்சி ஒரு ராசிக்கு நடைபெறுகிறது என்றால் ஒரு இழப்பை கொடுத்துதான் பாடம் கற்று கொடுப்பார்.
அப்படியாக அவரின் அருள் பார்வை நம்மீது பட சில சிறப்பு கோயில்கள் உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சனி ஒரு ராசியில் இருந்து மற்றோரு ராசிக்கு நகரக்கூடியவர்.
அப்படியாக சனியின் வாகனமாக காகம் என்பதும்,அவர் காகம் மீது அமர்ந்து இருப்பதை தான் பெரும்பாலான கோயில்களில் பார்த்திருப்போம்.
ஆனால் இந்தியாவில் அமைந்துள்ள ஒரு சனி பகவானின் கோயிலில் அவர் யானை மீது அமர்ந்திருப்பதாகவும், அந்த அவதாரத்தை தரிசித்தால் செல்வம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அன்னபூர்ணா பகுதியில் அமைந்துள்ள சனி பகவான் கோயில். 15 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு சென்று வந்தாலே பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம்.
இந்த கோயிலில் உள்ள சிறப்பு என்னவென்றால் இங்கு சனி பகவான் யானை மீது அமர்ந்திருக்கும் திருக்கோலம் தான்.இந்த உருவத்தில் அவரை தரிசிக்கும் போதும் உங்கள் கோபம் குறைந்து, மன அமைதி பெறும் என சொல்லப்படுகிறது.
மேலும் சனி யானை மீது வருவது போன்ற தோற்றத்தில் இருப்பதால் செல்வம், செழிப்பு உண்டாகும் எனவும் கூறப்படுகிறது. இந்த கோயிலில் தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |