சனி பகவானின் தாக்கம் குறைய நாம் செய்ய வேண்டிய வழிபாடு
நீதியும் நேர்மையும் எந்த சூழ்நிலையிலும் எக்காரணத்தாலும் விட்டு கொடுக்காத சனிபகவானுக்கு அவரை போலவே நீதியும் நேர்மையும் கொண்ட மனிதர்களை தான் மிகவும் பிடிக்கும்.அதாவது சில மனிதர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருப்பார்கள்.
சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களின் நியாயம் மாறி கொண்டு இருக்கும்.பொய் பகைமை வளர்த்து மனிதர்களிடையே வெறுப்பை சம்பாதித்து இருப்பார்கள் அப்படியான மனிதர்கள் சனிபகவனிடம் இருந்து தப்பிக்க முடியாது.இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான்.
அப்படியாக சனி திசை சனி பெயர்ச்சி காலங்களில் சனி பகவான் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்ற வாழ்க்கை பாடத்தை கற்று கொடுப்பார். இப்பொழுது நாம் அந்த கால கட்டங்களில் சனியின் பாதிப்பு குறைய நாம் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
சனிபகவானின் அருளை பெற நம்முடைய வீட்டில் சில எளிய முறைகளை கடைபிடித்தாலே போதும்.அதாவது நாம் குளிக்கும் வேளையில் சிலர் நேராக முதலில் தலைக்கு தண்ணீர் ஊற்றிய பிறகே உடம்பு மேல் ஊற்றுவார்கள்.அவ்வாறு செய்ய கூடாது.
முதலில் முழங்காலில் இருந்து பாதம் வரை கால்களை சுத்தமாக, உங்கள் கைகளால், மேல் பக்கத்திலிருந்து கீழ்ப்பக்கம் வரை தேய்த்தபடி கழுவி விடுங்கள். பிறகு குளிக்கத் துவங்க வேண்டும். மேலும் வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பிய பிறகு அதிகம் பேர் கால்கள் கழுவும் பழக்கம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.
மேலும் கால்களை கழுவினாலும் கால் முழுவதும் தண்ணீர் ஊற்றி கழுவும் பழக்கம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.இவ்வாறு செய்யும் பொழுது சனி தோஷம் உண்டாகிறது. சமயங்களில் வீடுகளில் காகம் வந்து கத்தி கொண்டு இருக்கும்.
பெரும்பாலான வீடுகளில் காகம் கத்தும் பொழுது அதற்கு உணவு வைப்பார்கள்.ஆனால் சிலர் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள்
.அப்படியானவர்களுக்கும் சனியின் பாதிப்பு உண்டாகும்.ஆக ஒரு சில எளிய விஷயங்களை முறையாக பின்பற்றினாலே நாம் சனியால் உண்டாகும் பாதிப்பில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |