19 ஆண்டுகளுக்கு பிறகு உறவாகும் ராஜயோகம்-சனி மகாதசையால் அதிர்ஷடம் யாருக்கு?
வேத சாஸ்திரத்தில் ஜோதிடம் முக்கிய பங்கு வகிக்கிறது.ஜோதிட சாஸ்திரத்தில் 9 கிரகங்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் குறித்து கூறப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு கிரகங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப அனைத்து ராசி நட்சத்திரங்களும் தங்கள் பலனை அடைகின்றனர்.
அதில் சனி கிரகம் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. அந்த வகையில் சனியின் தாக்கம் ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு பலன்கள் கொடுக்கும்.அவை நல்ல பலனாகவும் இருக்கலாம்,கெட்ட பலனாகவும் இருக்கலாம்.
சனி பகவான் சாதகமான நிலையில் இருந்தால் சில ராசியினர் அதிக அதிர்ஷ்டத்துடன் திகழ்வர்.ஜோதிடத்தின் படி, 19 வருடங்கள் நீடிக்கும் சனி மகாதசை தற்போது ஆரம்பமாகிறது. இதனால் சில ராசியினருக்கு சனி பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். அவ்வாறு 19 வருடங்களுக்கு சனி பகவான் அருளால் ராஜயோகத்துடன் வாழப்போகும் அந்த 4 ராசிகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கன்னி:
கன்னி ராசியின் 5ம் வீட்டிலும், 6ம் வீட்டிலும் சனி இருக்கிறார். எனவே இவர்கள் சனியின் அருளால் பல நன்மைகளை பெற போகிறார்கள்.நீண்ட நாள் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.உங்களுக்கு சனி பகவான் சாதகமான நிலை மிக பெரிய வெற்றியை தரும்.
சில காலமாக மனக்கவலையுடன் காணப்பட்ட உங்களுக்கு மனதில் மிக பெரிய தைரியமும் தன்னம்பிக்கையும் உருவாகும்.வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சியான அனுபவங்கள் கிடைக்கும்.சமுதாயத்தில் நற்பெயர் கிடைக்கும்.பொருளாதாரம் மேம்படும்.
தனுசு:
தனுசு ராசியின் 2ம் வீட்டிலும், 3ம் வீட்டிலும் சனி இருக்கிறார்.ஆதலால் இந்த சனி மகாதசை தனுசு ராசியினர் பல நன்மைகளைப் பெறப்போகிறார்.பொதுவாகவே தனுசு ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள்.ஆனால் அவர்களுக்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைப்பது இல்லை.
இனி வரும் காலங்களில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.இதனால் உங்கள் நிதி நிலையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த கடன் சுமை முற்றிலுமாக குறைந்து விடும்.
துலாம்:
துலாம் ராசியின் 4ம் வீட்டிலும், 5ம் வீட்டிலும் சனி இருக்கிறார்.ஆதலால் இந்த சனி மகாதசை துலாம் ராசிக்கு சகல யோகங்களையும் வழங்க போகிறார்.துலாம் ராசியினர் மனதில் இருந் குறிக்கோள் அனைத்தும் நிறைவேற்றும் காலம்.வாழ்க்கை தரம் உயரும்.
சமீப காலமாக மனஉளைச்சலில் இருந் துலாம் ராசிக்கு சனிபகவானின் பரிபூர்ண அருளால் மனக்கஷ்டம் விலகி மீண்டும் மனதில் தடுக்கமுடியாத நம்பிக்கை பிறக்கும்.நீங்கள் செய்யும் தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள்.
மீனம்:
மீன ராசியின் பன்னிரண்டாம் வீட்டில் சனி இருக்கிறார். எனவே, சனி மகாதசையால், மீன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் வரப்போகிறது.இத்தனை காலம் இவர்கள் சந்தித்த துனபத்திற்கு நல்லதோர் முடிவு கிடைக்கும்.
மீன ராசியினர் ஆசைகள் இலட்சியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும் காலம் இது.இறைவனின் பரிபூர்ண அருள் இவர்களுக்கு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |