சனி ஆட்டத்தை தொடங்கிவிட்டார்-இவர்கள் காட்டில் இனி மழை தான்

By Sakthi Raj Mar 23, 2025 11:01 AM GMT
Report

நவகிரகத்தில் நிதிமானக விளங்குபவர் சனி பகவான். இவர் ஒருவருடைய கர்ம பலனை போக்குபவர். அப்படியாக, சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் இரண்டரை வருடம் ஆகும்.

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக செல்லக்கூடியவர் சனிபகவான். மேலும், சனி பகவான் நல்லது கெட்டது எதுவாயினும் அதை இரட்டிப்பாக கொடுப்பார். அந்த வகையில் சனி பகவான் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.

பிறகு அவர் தற்பொழுது மார்ச் 29 மீனத்தில் நுழைகிறார். மீனம் குரு பகவானின் சொந்த ராசியாகும். சனி பகவானின் மீன ராசியின் பயணம் பலருக்கும் பல விதமான நன்மைகள் வழங்கும். சில ராசிகளுக்கு தீய பலன்களும் கொடுக்கப்போகிறார். அதில் எந்த ராசிக்கு மிகவும் நல்ல காலம் பிறக்க போகிறது என்று பார்ப்போம்.

சனிப்பெயர்ச்சி 2025: தனுசு மற்றும் மகர ராசிக்கு சாதமாக? பாதகமா?

சனிப்பெயர்ச்சி 2025: தனுசு மற்றும் மகர ராசிக்கு சாதமாக? பாதகமா?

மிதுனம்:

சனி பகவானின் மீன ராசி பயணம் மிதுன ராசிக்கு மிக பெரிய நன்மைகள் கொடுக்க போகிறது.  இதனால் வருமானத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் நல்ல பிணைப்பு உண்டாகும். பல நாள் மன வருத்தங்கள் குறையும். சகோதரி வழி பிரச்சனை நால் முடிவு பெரும்.

துலாம்:

துலாம் ராசியின் மீன ராசி பயணம் மிக சாதகமாக அமைய போகிறது. அதனால் இவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை மாற்றம் சம்பள உயர்வு கிடைக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பார்கள்.

மகரம்:

சனி பகவானின் மீன ராசி பயணம் மகர ராசிக்கு தந்தை வழி உறவால் நல்ல ஆதாயம் கிடைக்கும். திருமண வரன் அமையும். பொன் நகை சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணம் மனமகிழ்ச்சியை கொடுக்கும். வேலையில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US