சனி ஆடப்போகும் தாண்டவம்; 4 ராசிக்கு யோகம் - 4 ராசிக்கு விழப்போகும் அடி
நவம்பர் 28, 2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சியாகி தனது நேரடி பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
2026 ஆம் ஆண்டு சுமார் ஏழு மாதங்கள் அவர் நேர் கதியிலேயே பயணிக்க இருக்கிறார். ஜூலை 27, 2026 அன்று மீன ராசியில் இருந்து வக்ர நிலைக்கு மாறி, பின்னர் மீண்டும் டிசம்பர் 11, 2026 அன்று மீன ராசியிலேயே நேரடியாக பயணிக்கத் தொடங்குகிறார்.

இதனால் பலன் பெறவுள்ள ராசிகள்
ரிஷபம்
முடிக்க முடியாமல் இருந்த பழைய பணிகளை முடித்து வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும். அரசு வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்
தொழில் தொடங்குவதற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு கடன் அல்லது புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம்.
துலாம்
திடீர் வருமானம் அதிகரிப்பதால் சேமிப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த வியாதிகள் குணமாகும். மேலும் தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகுவதால் தொழில் சிறக்கும்.
மகரம்
எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியமும் அதிகரிக்கும். மன உளைச்சல் குறையும். மனம் நிம்மதி பெறும். இழந்த பணம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும்.
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
மீனம், மேஷம் , சிம்மம் மற்றும் தனுசு
உடல் ஆரோக்கியத்திலும், மன அழுத்தத்திலும் கவனத்துடன் இருக்க வேண்டும். வாகன பயணம் அல்லது புதிய முதலீடுகளில் எச்சரிக்கை தேவை. குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வது சிறந்தது.