சனி ராகு சேர்க்கையால் அடுத்த 3 மாதம் கவனமாக இருக்கவேண்டிய ராசிகள்
ஜோதிட சாஸ்திரப்படி சனியும் ராகுவும் மீன ராசியில் நுழைய இருக்கிறார்கள்.இது பிசாச யோகத்தை உருவாக்கும்.இது மிகவும் ஆபத்தான சேர்கையாக பார்க்கப்படுகிறது.இதனால் மார்ச் முதல் மே வரை இந்த 3 ராசியினர் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது.அதை பற்றி பார்ப்போம்.
ரிஷபம்:
இந்த நேரத்தில் உங்கள் நெருங்கிய நண்பர்களால் துரோகம் சந்திக்க வாய்ப்புள்ளது.உடன் பிறந்த சகோதரன் சகோதிரியிடம் கவனமாக இருக்கவேண்டும்.உடல் உபாதைகள் வர வாய்ப்புகள் உள்ளது.முக்கியமாக காது தொண்டை பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
மிதுனம்:
இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கோபமும் வெறுப்பும் அதிகமாகும்.இதனால் உங்கள் நற்பெயருக்கு கலங்கம் உண்டாகலாம்.அதிக மன அழுத்தம் சந்திக்கக்கூடிய காலம் என்பதால் மிக கவனமாக இருக்கவேண்டும்.
சிம்மம்:
தொழில் தொடர்பான விஷயங்களில் சில இழப்புகளை சந்திக்கலாம்.தாய் உடல்நிலையில் சற்று கவனமாக இருக்கவேண்டும்.சட்டம் தொடர்பான சண்டைகள் வரலாம்.ஆதலால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
தனுசு:
மாமியாருடன் வீண் வாக்குவாதம் தவிர்க்க வேண்டும்.மறைமுக எதிரிகளால் சில சங்கடத்தை சந்திக்க நேரிடும்.ஒரு சிலருக்கு பிள்ளைகள் வழியில் சில பிரச்சனை உருவாகும்.அரசியலில் இருப்பவர்களுக்கு மன குழப்பம் அதிகரிக்கும்.
கன்னி:
உணவு பழக்கத்தில் மிகவும் கவனமாக உட்கொள்ள வேண்டும்.உடல் நிலை மிகவும் மோசமாக பாதிப்பு அடையலாம்.கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க மூன்றாம் நபரை குடும்பத்தில் தலையிட விடாமல் பார்த்து கொள்வது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |