19 ஆண்டு சனி திசை என்ன செய்யும்? அதில் இருந்து தப்பிக்க என்ன வழி?
கிரகங்களில் நீதிமானாக திகழும் சனி பகவான் இரக்கம் இல்லாமல், யார் என்ன தவறு செய்கிறார்களோ அதற்கு உரிய தண்டனையை கொடுத்து பாடம் கற்றுக்கொடுக்க கூடியவர். அப்படியாக, அவர் பார்த்தாலே எல்லோருக்கும் ஒரு வித பயம் இருக்கும். அந்த வகையில் ஒரு மனிதனுக்கு ஏழரை சனியே தாங்க முடியாது.
அதிலும் 19 ஆண்டு காலம் சனி திசை அவர்களை புரட்டி போட்டு விடும். அப்படியாக, சனி திசை காலம் எப்படி அமையும். அந்த காலங்களில் துன்பம் வராமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
மனிதர்களுக்கு கட்டாயம் ஏதாவது ஓரு கால கட்டத்தில் சனி திசையோ, சனி புத்தியோ நடக்கும். அப்படியாக, யாருக்கு சனி திசை காலம் நடக்கிறதோ அவர்கள் கட்டாயம் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், இந்த சனி திசை காலங்களில் ஜாதகர் எதன் மீதும் பற்று இல்லாமல் இருப்பது நல்லது.
காரணம், அந்த ஜாதகர் எதன் மீது அதீத ஆசை பற்று வைக்கிறாரோ அதை சனி பகவான் பறித்து விடுவார். பிறகு அதனை இல்லாமல் போக செய்வார். முடிவில் அதனை வட்டியும் முதலுமாக உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார்.
மிக முக்கியமாக சனி திசை நடக்கும் காலத்தில் நாம் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். நாம் உண்ணும் உணவில் தொடங்கி, உடுத்தும் உடை வரை மிக மிக எளிமையாக இருப்பது அவசியம். சனி திசை வந்தால் சில இழப்புகளும், ஏக்கங்களும் ஏற்படுவது வாடிக்கைதான்.
அவ்வாறு நடப்பதின் வழியாக அந்த ஜாதகர் பணத்தின் அருமையும், உறவுகளின் அருமையும் புரிந்து கொள்வார். பொதுவாகவே, மனிதன் எதன் மீதும் அதிக அளவில் ஆசையும் பற்றும் இல்லாமல் வாழ்ந்து வந்தாலே அவர்கள் வாழ்க்கை மிக சிறப்பாக அமையும்.
அதிலும் குறிப்பாக சனி திசை காலங்களில் அவர்கள் முடிந்த வரை அதிக அளவில் எதற்கும் ஆசைப்படாமல், பெருமிதம் கொள்ளாமல் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து வந்தால் சனியின் தாக்கம் முற்றிலுமாக குறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |