சனி வக்கிர பெயர்ச்சி 2025: ஜூலை முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஆரம்பம்

By Sakthi Raj Jun 01, 2025 10:32 AM GMT
Report

 ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் மிக மிக முக்கியமானவராக கருதப்படுகிறார். இவர் ஒரு மனிதனின் செயல்களுக்கு ஏற்ப சுப பலன்கள் மற்றும் அசுப பலன்களை கொடுக்கிறார். அதனால் பலரும் சனி பகவான் என்றால் மிகவும் பயம் கொள்கின்றனர்.

தற்பொழுது சனி பகவான் மீனா ராசியில் பயணம் செய்து வருகிறார். மேலும் சனி பகவான் பின்னோக்கி செல்லும் காலம் வருகின்ற ஜூலை 13 காலை 7.24 மணிக்கு நடக்கிறது. பின் நவம்பர் 28 காலை 7. 26 மணிக்கு நேராக செல்ல உள்ளார்.

அதாவது சனி பகவான் சுமார் 138 நாட்கள் பின்னோக்கிய பயணத்தை செய்கிறார். இவை சில ராசிகளுக்கு மிக பெரிய நன்மையை கொடுக்கிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

ஜோதிடம்: பெண்கள் ஏன் தலை முடிக்கு சாம்பிராணி புகை போடவேண்டும்

ஜோதிடம்: பெண்கள் ஏன் தலை முடிக்கு சாம்பிராணி புகை போடவேண்டும்

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் பின்னோக்கிய பயணம் மிக சிறந்த நன்மைகள்  கொடுக்க போகிறது. இவர்களுக்கு வாழ்க்கையை பற்றிய புரிதல் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் சரி ஆகும் . திடீர் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு சனி பகவானின் பின்னோக்கிய பயணம் சில நன்மைகளை தர உள்ளது. நீண்ட நாட்களாக தடைப்பட்ட வேலை நடந்தேறும். சம்பள உயர்வு மற்றும் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றமும் மாற்றத்தையும் பெறுவீர்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சனியின் பின்னோக்கிய பயணம் குடும்பத்தில் மகிழ்ச்சியை கொடுக்க உள்ளது. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவு செய்வீர்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US