சனி வக்ர பெயர்ச்சியால் தலைவிதியே மாற போகும் ராசிகள் யார் தெரியுமா?
சனி பகவான் ஜூன் 30-ம் தேதி அதிகாலை வக்ரப் பெயர்ச்சி அடைய உள்ளார். சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும் சனி வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை சில ராசிகள் பெற உள்ளன.அது எந்த ராசிகள் என்றுபார்ப்போம்
ரிஷபம்
சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.வியாபாரம் மற்றும் வருமானத்தில் நல்ல முன்னேற்றம் லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் தங்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.புதிதாக தொழில் தொடங்குவது குறித்து ஆலோசனை செய்வீர்கள்.
மிதுனம்
சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் உங்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் மீண்டும் தொடர்பு கொண்டு பேசலாம்.கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.நினைத்த படி வருமானம் அதிகரிக்கும்.தொழிலில் நல்ல அந்தஸ்த்து கிடைக்கும்.வியாபாரத்தை விரிவு படுத்துவார்கள்.
சிம்மம்
சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.பல நாள் தடைபட்டு இருந்த வேலைகள் எடுத்து செய்வீர்கள்.நஷ்டம் என்று சந்தித்த வியாபாரம் நல்ல நிலைமைக்கு வரும்.திருமணம் காய் கூடி வரலாம்.உடல் ஆரோக்கியம் சீராகும். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள்.
கன்னி
சனி வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல மதிப்பு ஏற்படும்.எதிர்ப்பார்த்த செய்து வந்து சேரும்.குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு சொல்வீர்கள்.புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டம் போடுவீர்கள். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |