சங்கரநாராயண சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் கடந்த 2008ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
அதன்பின் 15 ஆண்டுகள் கழித்து இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்காக கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ராஜகோபுரம், விமானங்கள் மற்றும் கோபுரங்கள் வண்ணம் தீட்டப்பட்டன.
இப்பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி மாலையில் வேத பாராயணம், திருமுறை பாராயணத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இன்று காலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜை , 8 மணிக்கு மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.
காலை 9 மணிக்கு கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி விமானம், ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 9.45 மணிக்கு கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி, மூலஸ்தானங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேக நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
மேலும், இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |