அரியும் சிவனும் ஒன்று என உலகிற்கு சொல்லும் கோவில்: எங்கு உள்ளது?
அனைவரும் சமம் என்ற கருத்தை உலகிற்கு கடவுளே வந்து சொன்ன தலம் தான் தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோவில்.
சங்கன் மற்றும் பதுமன் என இருநாகங்கள் தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்தார்கள்.
சங்கன் என்ற நாகம் தான் வணங்கும் சிவனே சிறந்தவர் என்றும், பதுமன் நாகம் தான் வணங்கும் அரியே சிறந்தவர் என்றும் சண்டையிட்டனர்.
இருவரும் சிவனை வேண்டி தவம் செய்யும் யோகினி எனும் கோமதி அம்பாளிடம் சென்று முறையிட்டனர்.
கோமதி அம்பாளும் சிவனிடம் வேண்டினார். அவரும் வேண்டுதலுக்கு இணங்க சங்கரநயினாராக உலகிற்கு காட்சியளித்தார்.
அதாவது பாதி உருவம் சிவனாகவும் (சங்கரன்), மறுபாதி உருவம் அரியாகவும் ( நயினார்) காட்சியளித்து இரு கடவுளுமே சமம் என்று உலகிற்கு உணர்த்தினார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |