சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வழிபடும் முறை

By Sakthi Raj Oct 10, 2024 05:30 AM GMT
Report

சரஸ்வதி பூஜை:

கல்விக்கு அதிபதி சரஸ்வதி தேவி.இவள் அருளால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.அப்படியாக சரஸ்வதி பூஜை நாளை (11.10.2024)அன்று கொண்டாடப்படுகிறது.அன்றைய நாளில் வீட்டில் சரஸ்வதி தேவிக்கு எவ்வாறு பூஜை செய்து வழிபாடு செய்யவேண்டும் என்று பார்ப்போம்.

நம்முடைய வீட்டில் ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும்.பிறகு சரஸ்வதி தேவியின் படத்திற்கு படத்திற்கு அருகம்புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும்.

நம்முடைய வீடுகளில் பிள்ளைகளின் படிப்பு சிறக்க அவர்களின் சில முக்கியமான புத்தகங்களை மேஜையின் மேல் அடுக்கி, படத்தின் முன் ஒரு இலை விரித்து,அதில் வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் படைக்க வேண்டும்.

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வழிபடும் முறை | Saraswati Ayudha Poojai Celebration 

அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். பிறகு வீட்டில் உள்ளவர்களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் பிரசாதம் வழங்கலாம்.அதனை தொடர்ந்து மறுநாள், காலையில் புதிதாக இலை போட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜையை நிறைவு செய்த பின் சரஸ்வதி படத்தை எடுத்து விட வேண்டும்.

மஞ்சள் அல்லது சந்தனத்தில் முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைக்கலாம் முடியாதவர்கள் வீட்டில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.

பெரும்பாலான மக்கள் நவராத்திரி நாட்களில் அம்பிகையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று அம்மனை பூஜித்து வணங்கினால் அம்பிகையின் அருள் பரி பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வழிபடும் முறை | Saraswati Ayudha Poojai Celebration

அன்றைய முக்கிய நாளில் கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும்.

ஆக குழந்தைகள் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் படிப்பில் வாழ்க்கையில் நல்லமுறையில் தேர்ச்சி பெற கலைமகளை வேண்டி கொள்ள அவளின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.

நவராத்திரி முடியும் முன் நாம் கட்டாயம் செய்யவேண்டியவை

நவராத்திரி முடியும் முன் நாம் கட்டாயம் செய்யவேண்டியவை


ஆயுத பூஜை:

ஆயுத பூஜை என்பது நம்முடைய வாழ்க்கையின் உண்மையை உணரவே.அதாவது சிலர் தொழில் செய்து அவர்கள் வாழ்க்கை வாழ்ந்து வருவார்கள்.சிலர் தொழிற்ச்சாலையில் சிலர் வாகனங்கள் கொண்டு தங்களுடைய தொழில் நடத்தி வருகிறார்கள்.

அப்படியாக அந்த ஆயுதங்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை அன்று வழக்கம் போல நம்முடைய வீடு மற்றும் கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் நம்முடைய அன்றைய நாள் வாகனங்களையும் சுத்தம் செய்வது மிக அவசியம்.

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வழிபடும் முறை | Saraswati Ayudha Poojai Celebration

அடுத்தபடியாக தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் செய்தல் வேண்டும். சுத்தம் செய்த பின் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கடவுளாக எண்ணி பூஜை செய்ய வேண்டும்.

பூஜையின்போது பொரி, பழங்கள், பேரீச்ச ம்பழம் போன்றவற்றை நெய்வேத்தியமாக படைத்து வழிபடுவது சிறப்பு. செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்.

நாம் செய்யும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை கடவுளாக போற்றி வணங்குவது தான் ஆயுத பூஜையின் நோக்கமாகும்.அன்றைய தினத்தில் இவ்வாறு கடவுள்களுக்கு படைத்தது மனதார வழிபட நம்முடைய  வாழ்க்கை சிறக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US