2026: சரஸ்வதி பூஜை அன்று சொல்லவேண்டிய 108 சரஸ்வதி போற்றி மந்திரங்கள்

By Sakthi Raj Oct 18, 2026 09:34 AM GMT
Report

 கல்விக்கு அதிபதியாக இருக்கக்கூடிய சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக சரஸ்வதி பூஜை உள்ளது. அந்த நாளில், நாம் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யும் பொழுது கல்வியில் உள்ள மந்த நிலை மற்றும் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய ஆசீர்வாதம் கிடைக்கிறது.

அந்த வகையில், சரஸ்வதி தேவிக்குரிய மந்திரங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு சரஸ்வதி தேவியின் முழு அருள் கிடைக்கிறது.

அப்படியாக, நாளை சரஸ்வதி பூஜை என்று சொல்ல வேண்டிய 108 போற்றி மந்திரங்களை பற்றி பார்ப்போம்

2026: சரஸ்வதி பூஜை அன்று சொல்லவேண்டிய 108 சரஸ்வதி போற்றி மந்திரங்கள் | Saraswati Pooja 108 Potri Manthirangal

கடக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் வாழ்க்கையில் பெரிய திருப்பம் காத்திருக்கிறதாம்

கடக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் வாழ்க்கையில் பெரிய திருப்பம் காத்திருக்கிறதாம்

சரஸ்வதி 108 போற்றி

ஓம் அறிவுருவே போற்றி

ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி

ஓம் அன்பின் வடிவே போற்றி

ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி

ஓம் அறிவுக்கடலே போற்றி

ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி

ஓம் அன்ன வாகினியே போற்றி

ஓம் அகில லோக குருவே போற்றி

ஓம் அருளின் பிறப்பிடமே போற்றி

ஓம் ஆசான் ஆனவளே போற்றி

ஓம் ஆனந்த வடிவே போற்றி

ஓம் ஆதாரசக்தியே போற்றி

ஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி

ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி

ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி

ஓம் ஈடேறச் செய்பவளே போற்றி

ஓம் உண்மைப் பொருளே போற்றி

ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி

ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி

ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி

ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி

ஓம் ஓங்கார வடிவினளே போற்றி

ஓம் கலைக் களஞ்சியமே போற்றி

ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி

ஓம் கலை ஞானச் செல்வியே போற்றி

ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி

ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி

ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி

ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி

ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி

ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி

ஓம் குணக் குன்றானவளே போற்றி

ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி

ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி

ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி

ஓம் சாந்த சொரூபினியே போற்றி

ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி

ஓம் சாரதாம்பிகையே போற்றி

ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

ஓம் சித்தியளிப்பவளே போற்றி

ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி

ஓம் சுத்தஞான வடிவே போற்றி

ஓம் ஞானக்கடலானாய் போற்றி

ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி

ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி

ஓம் ஞானேஸ்வரியே போற்றி

ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி

ஓம் ஞான ஆசிரியையே போற்றி

ஓம் ஞானத்தின் காவலே போற்றி

ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி

ஓம் தகைமை தருபவளே போற்றி

ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி

ஓம் தாயான தயாபரியே போற்றி

ஓம் தண்ணருள் தருவாய் போற்றி

ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி

2026: சரஸ்வதி பூஜை அன்று சொல்லவேண்டிய 108 சரஸ்வதி போற்றி மந்திரங்கள் | Saraswati Pooja 108 Potri Manthirangal

2026: தீபாவளிக்கு முன்பு உருவாகும் கஜகேசரி ராஜ யோகம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் யாருக்கு?

2026: தீபாவளிக்கு முன்பு உருவாகும் கஜகேசரி ராஜ யோகம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் யாருக்கு?

ஓம் நவமி தேவதையே போற்றி

ஓம் நவராத்திரி நாயகியே போற்றி

ஓம் நன்னெறி தருபவளே போற்றி

ஓம் நலம் அளிப்பவளே போற்றி

ஓம் நாவிற்கு அரசியே போற்றி

ஓம் நல்லவர்களின் மனமே போற்றி

ஓம் நா நயம் அருள்வாய்போற்றி

ஓம் நான்மறை நாயகியே போற்றி

ஓம் நாவில் உறைபவளே போற்றி

ஓம் நாதத்தின் தலைவியே போற்றி

ஓம் நாத வெள்ளமானாய் போற்றி

ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி

ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி

ஓம் நித்தம் வளர்பவளே போற்றி

ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி

ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி

ஓம் பண்ணின் இசையே போற்றி

ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி

ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி

ஓம் பிரணவ சொரூபமே போற்றி

ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி

ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி

ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி

ஓம் பூரண வடிவானவளே போற்றி

ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி

ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி

ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி

ஓம் மங்கல வடிவானவளே போற்றி

ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி

ஓம் மாயையை அழிப்பவளே போற்றி

ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி

ஓம் முற்றறிந்த அறிவே போற்றி

ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி

ஓம் மூல மந்திர வடிவினளே போற்றி

ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி

ஓம் முக்தி அளிப்பவளே போற்றி

ஓம் மேதையாக்குபவளே போற்றி

ஓம் மேன்மை தருபவளே போற்றி

ஓம் யாகத்தின் பலனே போற்றி

ஓம் யோகத்தின் பயனே போற்றி

ஓம் வழித்துணை வருவாய் போற்றி

ஓம் வரம் அருள்பவளே போற்றி

ஓம் வாணி சரஸ்வதியே போற்றி

ஓம் வாக்கின் நாயகியே போற்றி

ஓம் வித்தக வடிவினளே போற்றி

ஓம் வித்யா லட்சுமியே போற்றி

ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி

ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி

ஓம் வெண்தாமரையினாளே போற்றி

ஓம் வீணை ஏந்தியவளே போற்றி

ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி

ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி

ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US